பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莺姆 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

இன்றைய திரையுலகிலே, பெரும்பாலும் தாய் நட்சத்திர மாக, பார்ப்பவர் மனமுருகிட அற்புதமாக நடித்து வரும் பூரீவித்யா என்ற நடிகையின் தாயார்! .

ஒரு பெண்பால் இசைஞானியின் இசைத் திறன், அரசவை நிகழ்ச்சிகளிலும் ஒலித்து, பெயரும், புகழும் பெற வேண்டும் என்று எண்ணிய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., 'அரசவைத் தமிழிசைச் செல்வி'என்ற விருதை வழங்கி அரசு கெளரவத்தை அவருக்கு அளித்து, மாத ஊதியம் பெற வழி வகுத்தார்: .

கண்ணுக்கு விருந்தளிக்கும் கவின் கலை ஆடற்கலை! அந்தந்த நாட்டின் கலைப் பண்புகளை அதன் நயங்களை பயன்பாடுகளை, ஆடலழிகள் தமது விழி நயனங்களால் - மெய்பாடுகளால் விளக்கி, பார்ப்பவர்களுக்கும், பகிர்ந்தளித்துப் பரிமாறிடும் இறைவழிபாட்டின் அற்புதக் கலை! அதனால்தான்், அக்கலை ஆலயங்களிலே ஆரோகணமாக வளர்ந்தது!

இயற்கையின் இயக்கமே அசைவதும் ஆடுவதும் தான்ே! அதன் எதிரொலிதான்் ஆடற்கலை! அது அறிவை வளர்க்கும் தெய்வீகத்திலே ஆன்மாவை சேர்க்கும்! மனம் மயங்கி இணங்க வைக்கும்:

ஆண்கள் கூட ஆடலாம் ஆடற்கலையை! அவன் ஆடினால் பண்பு நலம் பெறுவான்! மென்மை மனமடைவான்! உடல் வளமும் பலமும் உருவாகி, அழகுக்கே உருவாக்கப் பட்ட அணங்குகளையும், தோற்கடிக்கும் உடலுக்கு, உவந்து தவழ்ந்தாடும் எழில் மேனியையும் காண்பான்!

அந்த பொன்னார் மேனியனுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் தான்், சிலிர்த்த அழகு சிதறும் நமது செம்மேனிச் செம்மலான பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.! -

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் அந்த ஆடற்கலை மாண்டை, 'மன்னாதி மன்னன்' என்ற படத்திலே, தரையிலே புலி ஒவியம் வரைவதிலே கண்டோம் - இல்லையா?

தெய்வீகப் பண்புகள் சிதறும் இந்த ஆடற்கலையின் புகழை, உலக நாடுகள் எல்லாம் உற்று நோக்க வேண்டும் -