பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி +++

மகிழ்ந்து பாராட்ட வேண்டும் - தமிழ்க் கலைகளைத் தரணி கண்டு வியக்க வேண்டும் என்ற பேராசை எம்.ஜி.ஆருக்கு:

சுவர்ணமுகி என்ற ஆட்டனத்தியை தமிழக அரசின் ராஜ நர்த்தகியாக நியமித்தார்! ஆடற்கலைக்குப் பெருமை சேர்த்தார்: மாத ஊதியமும் வழங்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார் அரசு சார்டாக:

மாண்டலின் என்பது ஒரு மேலை நாட்டு இசைக் கருவி! சுவரம், தாளம், ஒத்திசைப்புக்கு மட்டுமே பயன்படும் வாத்தியம் அது:

இசையை மீட்டிட இயலாது அக்கருவியாலே, குறிப்பாக, மேலைநாட்டு இசையைத் தவிர, கர்நாடக இசையை அறவே இயங்க வைக்க இயலாத கருவி!

அந்த மாண்ட்லின் இசைக் கருவியிலே, எல்லா அராகங் களையும் விரைவாக, அழகாக, சுவரம் பிறழாமல் இனிமையாக மீட்டிட முடியும் என்பதை, சீனிவாசன் என்ற இளைஞன் காட்சியாக்கினான்!

இசை மேடையிலே அதைக் கண்ட எம்.ஜி.ஆர். சிறுவனின் வியன்மிகு திறமையை விளங்கி வியந்தார்:

அதே இடத்தில், தன் கழுத்திலே அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி அந்த இளைஞன் கழுத்திலே அணிவித்துப் பாராட்டி மகிழ்ந்தார்:

இன்று. அந்த இளைஞன், அமெரிக்கா போன்ற கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் சென்று, மாண்ட்லின் சீனிவாசன் என்ற புகழைப் பெற்று, இசை உலா வருகின்றார்:

தனக்கென ஓரிடத்தைப் பற்றிய தாரகையாகத் திரை வானில் ஒளிர்ந்து கொண்டிருந்தவர் கவிஞர் கண்ணதாசன்

அவர்கள்! . . . . . - .

கொத்து முத்தமிழ் கொண்டு, பொருள் கொழுத்த தமிழால், சம்பவங்களுக்குரிய சான்றான பாடல்களாக நிற்க சங்கத் தமிழைக் கையாண்டவர் அவர்! -