பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி of 9

மதுரமொழுகும் தென்னந்தமிழால் ஏறக்குறைய பத்தாயிரம் பாடல்கள் இயற்றிய கவியரசு கண்ணதாசன் அவர்கள், தமிழ்த் தொண்டாற்றிட அமெரிக்கா சென்றபோது காலம் ஆனார்: அவர் தேசிய நீரோட்டத்திற்காக உழைத்தவர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக சபாநாயகர் மாநாட்டிற்குச் சென்ற தமிழக மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு அவர்கள், புரட்சித் தலைவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்! அரசியல் தொண்டுக்காக சென்ற இடத்திலேயே இறந்து போனார்! -

மூன்றாவதாக நடமாடும் பெரியார் என்று சாகும்வரை போற்றப்பட்டவர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி! அவர் கலைஞர் இயக்கத்தைச் சார்ந்தவர்: "தனி அரசு என்ற் நாளேட்டின் உரிமையாளர் - ஆசிரியர்! சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்: இலக்கிய, அரசியல் எழுத்தாளர்:

நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்தபோது, அந்தமான் தீவுகள் தமிழர்களின் அழைப்பை ஏற்று, ஆங்குள தமிழ்ச் சங்கங்களிலே சொற்பொழிவாற்றச் சென்றார்! மாரடைப்பால் எதிர்பாராமல் மாண்டார்!

கவியரசு கண்ணதாசன், சி.பி. சிற்றரசு, ஏ.வி.பி. ஆசைத் தம்பி இவர்கள் மூவரும், தமிழ் - அரசியல் தொண்டு களை ஆற்றிட,கடல் கடந்து சென்று மரணமடைந் தார்கள்! மூவரும் மூன்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள்! அந்த மூவர் பினங்களும் கடலுக்கு அப்பாலே கிடந்தன!

முதல்வர் புரட்சித் தலைவருக்கு இவர்கள் இறந்த செய்தி கிடைத்தது - அந்தந்த நாடுகளிடமிருந்து பதறினார் - பழகிய பாசத்தால்! துடித்தார்!

கட்சிகள் பிணங்காளயிற்றே என்ற பிணக்கேதுமின்றி, விமானங்களிலே அந்தப் பினங்களைத் தக்கவாறு பாதுகாப் புடன் கொண்டு வந்து, அவரவர் உறவுகளிடம் ஒப்படைத்து,