பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డ్రీ மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். வந்து ஊட்டும் என்ற நெறியோடு, திருக்குறளின் ஊழ்' இயலுக்கு இலக்கியமாய்த் தோற்றமளிப்பது சிலப்பதிகாரம்.

இருப்பினும், அது தமிழர் பண்பாடு. இசை, நாடகம், ஆடற்கலை, நாகரிகம் அனைத்தையும் எதிரொலிக்கும் தமிழக வரலாற்று நூல்:

அரிச்சந்திரா புராணம், திருக்குறளின் வாய்மை’ என்ற அதிகாரத்திற்குரிய விரிவான இலக்கியம்!

திருக்குறளின் மூன்றாவது பாலான இன்பத்துப் பாலுக்குரிய காப்பியமாக நடமாடுவது ஜீவக சிந்தாமணி

சேக்கிழாரால் எழுதப்பட்ட திருத்தொண்டர் மாக் கதை என்ற பெரிய புராணம், திருக்குறளின் அறத்துப்பால் அதிகாரங்கள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்த தமிழர் தம் பண்பாட்டு நூல்:

அறுபத்து மூன்று நாயன்மார்களும் மக்களின் வாழ்வியலுக்கும் - தமிழர் தம் தெய்வீகப் பண்புகளுக்கும், அருளுடைமையை அடையாளம் காட்டுகிறார்கள்:

இத்தனை அரும்பெரும் நூற்களுக்கும் மேலாக, அழுது கொண்டே பிறக்கின்ற ஒரு குழந்தை, வளர்ந்து, வாழ்ந்து, வானுறையும், தெய்வமாக விளங்கிட, சிரித்துக் கொண்டே

இதிை: : இ! சாகும் வரை, உலக மக்களை இயக்கிடும் வாழ்க்கைத் தத்துவமாக இயங்கும் ஒரே ஒரு நூல், உலகில் திருக்குறள் என்ற பொது மறைதான்்!

திருக்குறள் நெறிகளை ஏறக்குறைய அறுபதாண்டுக் காலமாக, தமிழக முழுவதும் குறிப்பாக, டில்லி நாடாளு மன்றத்திலும், ரிஷிகேத்திலும் கடல் கடந்து வாழும் தமிழர் களிடையேயும் அரும்பாடுபட்டு பரப்பி வந்த மேதை திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள்.

திருக்குறளாசின் தமிழ் மறைத் தொண்டின் அருமையை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர். டில்லி நாடாளுமன்றத்திலே மீண்டும் திருக்குறாளர் நெறிகள் எதிரொலிக்கட்டும்