பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 59

கட்சியின் அரசியல் துறையிலும் - கலைத் துறையிலும் அப்போது கேலி பேசின!

நடிப்பால் எம்.ஜி.ஆர். உயர்ந்தார் என்று கணக்குத் தவறிய நடிகர் சிலர், அவரது புகழைக் கொட்டகையிலே கெடுக்க எண்ணினார்கள்!

பண்பால் எம்.ஜி.ஆர். உயர்ந்தார் என்ற எண்ணங் கொண்ட சிலர், அவரது பண்பின் எடையை நாணயமற்றத் துலாக் கோலால் எடை போட்டனர்!

கட்சியால் எம்.ஜி.ஆர். உயர்ந்தார் என்று கருதிய சிலர், அவர் சார்ந்திருந்த கட்சியையே தாக்கினார்கள்!

வள்ளன்மையால் எம்.ஜி.ஆர். உயர்ந்தார் என்று வரம்புக் கட்டிய சிலர், அறத்தை விலை பகர அங்காடிகளிலே நின்றார்கள்!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். பிறகு, எதனால் உயர்ந்தார்?

நிலவு எப்படி உயர்ந்தது என்று நமக்குத் தெரியாதோ - அதைப்போல, இவருடைய உயர்வுக்குக் காரணம், எது வென்று நம்மால் அறிந்துணர இயலவில்லை!

ஒரு சிலரின் பொறமைத் தி, இவரைச் சுட்டபோது, ஒளிவிடும் மக்கள் தங்கமானார் எம்.ஜி.ஆர்.!

சிலரின் வஞ்சகக் குளிர் நடுக்கம் - இவரைத் தாக்கிய போது, புரட்சித் தலைவர் விரைத்து விட்ட வரில்லை.

மனிதனுக்குத் தேவையான - அதுவும் ஒர் ஆண் மகனுக்குத் தேவையான, சிறப்பாக அறிஞர் அண்ணாவின் தம்பிக்குத் தேவையான, வீரம், இவரிடத்தில் குறையாமல் பொங்கி நிமிர்ந்து நின்றது!

நாட்டின் விடுதலைக்கோ, மொழியைக் காப்பதற்கோ, தேர்தல் பிரச்னைகளைத் தெளிவாக்குவதற்கோ தத்துவ ஞானிகள் தனிச் சிந்தனையில் உதயமான நல்ல அரசியலை உருவாக்கு வதற்கோ, மக்கள் அரசியல்வாதிகளை விரும்புகிறார்கள்!