பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். 'முயலை எறிந்த அம்பில்கூடப் பெயரைப் பொறித்துக் கொள்கின்ற காலம் இது:

'உன்னுடைய அம்பு, வேழத்தைப் பிழைத்ததல்லவா? வேங்கையை வீழ்த்தியதல்லவா? மானை, முள்ளம் பன்றியை, உடும்பைத் தாக்கிய அம்பு! இத்தனை உயிர்களையும் கொன்ற கணை உனது குறி தவறா வீரக் கணை!”

'கொஞ்சம் புகழ் கிடைத்தால், கிட்டிய கீர்த்தி ஒளி விளக்கைப் பகலிலேயே பலருக்குக் காட்டிடக் கைகளிலே

, ; ; ;

ஏந்திச் செல்லும் காலம் இது!

4 * – - - - .- .* £ -; *

ஆனால், நீ, நாண் பூட்டி எய்துவதில் இவ்வளவு வல்லவனாக இருந்தும், உன் பெயரை அம்பில் பொறிக்காமல், புகழை துறந்து விட்டிருக்கிறாயே!”

'இது நல்லதோர் பண்பு! நீ புகழேந்தி அன்று! உனது பெற்றோரிட்ட சிறப்புப் பெயர்தான்் என்ன?’ என்று, அந்தப் பாணர்கள் வியப்புரையாடல் விளைத்தனர்:

“என் பெயர் ஒரி' என்றான் வேடன்! 'வள்ளல் ஒரியா!' என்று மீண்டும் அவர்கள் வினவினர்: வெட்கத்தால், தலை கவிழ்ந்தான்் ஒரி! உடனே, "வல்வில் ஒரி வாழ்க’ என்று வாழ்த்தினர் Lារាំ

இந்த இலக்கியச் சான்றை நான் ஏன் கூறுகிறேன் என்றால், சங்க காலத்தில் தனக்கு வரும் புகழைத் துறந்து வாழ்ந்தவர் வள்ளல் ஓரி என்பவர், என்று குறிப்பிடவே:

சங்க கால ஒரிக்கும், மறைந்த பரங்கிமலைப் பாரிக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் சாடலாம் அல்லது கேட்கலாம்:

ஒரு மனிதனுக்குப் புகழ் வருகிறது என்றால், அவன் அதை நோக்கிக் கால் கடுக்க ஒடுகின்றான்.

அடிவானை நோக்கி ஓடுகின்ற சகோடப் புள், திரும்பி வர இயலாமையால் அங்கேயே விழுந்து இறக்குமாம்!