பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 79

பொது மக்கட்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள் கலைஞர்கள் தாம் என்பதை எவராலும் மறுக்க முடியாத ஒன்றாகும்.

ஒரு சமுதாயத்தில் கலைஞர்கள் அரிய பிறவிகளாகி விடுகின்றார்கள்,

ஒய்வு நேரத்தைப் புனிதமாக்கும் சக்தி, அவர்களிடம் இருப்பதால், கலைஞர்கள் மக்கள் பாராட்டுக்கு உரியவர்களா கின்றார்கள்.

அப்படிப்பட்டவர்கள், அரசியல் வாழ்வில் தங்கள் வானாளைக் கழிப்பார்களோயானால், பொதுமக்களிடமும் நல்லதோர் பாராட்டைப் பெறுகின்றார்கள் - போற்றப் படுகின்றார்கள்!

ஆனால், கலை உலகத்திலே கலைஞர்களுக்குள் ஒற்றுமை இருப்பதற்கில்லை. இதில் கட்சிகள் வேறு நுழைந்து விடுகின்றன:

தகுதிகேற்ற தக்கதோர் இடம் பிடிக்கும் நோக்கும் மனித

இயல்புதான்் என்றாலும், அது ஒரு பகை உருவமாக கலை உலகில் காணப்படுகின்றது.

இலட்சக்கணக்கிலே ஒரு கலைஞன் பொருளிட்டுவதை விட, பொதுமக்கள் செல்வாக்கெனும் பொருளை ஒரு கலைஞன் பெறுவது மிகமிகத் தேவையானாதாகும்.

எனவே, இத்தகையவர்களிடம் இருக்கும் அழுக்காறு, செல்வாக்குச் செறுக்கு, கலைஞர்களுக்குள் ஏற்படுவது பொதுவான ஒர் தீய பண்பாகும். மனித இயல்பும்கூட:

இதிலிருந்து விதிவிலக்குப் பெற்றவர் மட்டுமல்ல; புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். 'அழுக்காறு கொண்டவர்கட்கு அதுவே சாலும்” என்ற குறட் தத்துவத்தையும் உணர்ந்து நடந்தவர்:

அதனால்தான்், புகழ் காய்ச்சலெனும் கலிைலே புரண்டுக் கிடப்பவரைக் கண்டும் கூட, புன்முறுவல் காட்டி, அவர்கட்கு ஆற்ற வேண்டிய மனிதக் கடமைகளைச் செய்து, ஒறுத்து, நன்னயம் செய்தார்: