பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 33

வாழ்வில் பாதிக்கப்பட்ட கலைஞர்கள், கலைவாணரைத் தாயாக நினைத்து அடைக்கலம் பெறுவர்! அவரும் ஆறுத லளித்துப் போற்றி உதவி செய்தார். அவர்களுடைய - கட்ட நட்டங்களில் பங்கும் பெறுவார்!

மக்கள் திலகம் அவரைவிடப் பலபடிகள் மேலேறி, கைக்கு வந்ததைத் தன் கையே கணக்கறியாதபடி மனமுவந்துக் கொடுத்தார்:

திரையுலகத் துணை நடிகர்கள். எம்.ஜி.ஆரைத் தாயாகக் கருதி ஓடி வருவர். அவர்களைச் சேயாகக் கருதும் அவர், அவர்களின் நல்லன கெட்டன நிகழ்ச்சிகளுக்கும் குறிப்பறிந்து ஈந்தார்:

கலைத் தொழிலில் கவுரமாக ஒரு காலத்தில் வாழ்ந்த வர்கள் எல்லாம், வாழ்க்கையில் வெந்து நொந்து கூனிக் குறுகி வரும்போது, அவர்களைப் புரட்சி நடிகர் தனது உடன் பிறப்புகளாக அனைத்தார்; உடன் ஈகையின் தாள் திறக்கும்! இன்னுயிர் பேணும் அருமருந்துப் பொருளை அவரவர் நிலைக்கேற்ப அளவறியாமல் அள்ளி அள்ளி உதவி செய்தார்:

"The hands that help are holier than the tips that pray” (Ingersoi)

'இறைவனைத் துதிக்கின்ற வாயைவிட, ஒருவனுக்கு உதவி செய்கின்ற கைகள் மிகவும் துய்மையுடையன' என்ற இங்கர்சாலின் மனிதாபிமான உரைக்கு உவமையாக, ஈட்டிய பொருளைத் தனது உதவிக் கரங்களாக நீட்டியவர் பொன்மனச் செம்மல்!

'பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்' என்ற தமிழ் மறைத் தத்துவத்திற்கேற்ப மட்டுமன்று; அதற்கும் ஒருபடி மேலே சென்று, தனது சொந்த உழைப்பினால் வந்த வருவாயில் பெரும்பகுதியை, பிறர் நல வாழ்வுக்காக மழையெனப் பொழிந்து, வளம் கண்டு, பேரின்பம் எய்தியவர் எம்.ஜி.ஆர்.

கலைவாணர் திரை உலகிலே காலடி எடுத்து வைத்த

ஞான்று, நடிகர்களைக் கூத்தாடிகள் என்று அழைக்கப்பட்டுக் கேலி பேசியதும் உண்டு.