பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். கால மாறுதலுக்கேற்ப, பிறகு, மெல்ல மெல்ல மக்கள் செல்வாக்கு மற்ற நடிகர்களைவிட, கலைவானருக்கு மிகையாக ஏற்பட்டு விடவே, திரை உலகமே அவருக்குத் தடபுடலான மரியாதையினை வழங்க இரு கை கூப்பி ஓடி வந்தது.

கலைவாணருக்கு இத்தகைய உயர்நிலை ஏற்படக் காரணம்; அவர் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்் நாம் நடிக்க வந்திருக்கிறோம் என்ற நிலையைத் தகர்த்தெறிந்ததுதான்்!

கலை கலைக்காகவே என்ற கவைக்குதவாத நெறியை மாற்றி, கலை மக்களுக்காகவே என்ற நன்னெறியை அவர் கடைபிடித்தார்.

அதனால், சொல்லொணாத இன்னல்களை ஏற்று, ஏறு டைபோட்டு திசைவானிலே வெற்றி கண்டார்.

கலைவாணருக்கு இவ்வாறு வளர்ந்து வந்த செல்வாக்கு, புகழ், மரியாதை அனைத்தும், அவருடன் செல்வோருக்கும், அவரது பெயரைக் கூறிக்கொண்டு உதவி பெறப் போவோருக் கும்கூட, நல்லதோர் புகழைத் தேடித் தந்து, மரியாதை யினையும் தரும் கட்டாய நிலையைப் பெற்றுத் தந்தது.

இவற்றை எல்லாம் புரட்சித் தலைவர் உற்று நோக்கினார்: கலைவாணருக்கும், மக்களுக்கும் இடையே உருவான அன்புப் பாலத்தைக் கவனித்தார்:

கலை மக்களுக்காக, அவர்கள் நல்வாழ்வுக்குரிய அறிவுரைகளைக் கூறும் அறநெறிகளுக்காக, சமுதாய வளர்ச்சிக் காக, அதற்கான கருத்துக்களும், கதைகளும், வசனங்களும் பாடல்களும் அமைய வேண்டும் என்பதை, மிக ஆழமாகச் சிந்தித்தார் புரட்சி நடிகர். அந்த பொறுப்பை அவரே நேரடியாக ஏற்றார்: பொறுப்போடும் அவற்றைக் கவனித்தார்!

அதன் எதிரொலிதான்், அவரது படங்களும், பாடல்களும் மக்களிடையே அற்புதமான வெற்றிகளை ஈட்டித் தந்ததற்குரிய உத்திகளாகும்!