பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£32 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். இதைக் கண்ட கொடுங்கோலன் லூயி ஆட்சி, பேராத்திரம் கொண்டது! கொந்தளித்து எழுந்தது. ஆனாலும், மக்களுடைய மனதிலே மனித தெய்வமாக வீற்றிருந்த அந்த நடிகனைப் பிடித்துச் சிறையில் தள்ளப் பயந்தது!

பிரான்சில் மக்கள் புரட்சி ஏற்பட்டு விடுமோ என்ற பயமே அதற்குக் காரணம்! அதனால், அவரை அமைதியாகச் சந்தித்து, பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினராக்கினால், பிறகு ஊமையாகி விடுவார் என்று கருதிய லூயி ஆட்சி - அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது!

நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் லாபூசியர்! ஆனால், அங்கும் நாடக பாணியிலேயே பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரச்னைகளுக்காகவே போராடினார். நாடகங்களை நடித்துக்

காட்டினார்:

அதே நேரத்தில் முன்பைவிட சற்று அதிகமான தைரியத்தோடு, பிரான்ஸ் நாட்டு மக்கள், லாபூசியர் என்ற நாடகப் புரட்சியாளனது நாடகங்களை நடித்தனர்; பார்த்தன்ர். இந்த மக்கள் எழுச்சி, கொடுங்கோலன் லூயி ஆட்சிக்குப் பெரிய தலைவலியாக மாறிவிட்டது!

ரொட்டித் துண்டுகளுக்கு அலைந்த பிரெஞ்சு குடி மக்களது எரிகின்ற இதயத்திற்கு மக்கள் நடித்த லாபூசியருடைய நாடகம், பெட்ரோலை ஊற்றியது போலானது!

பார்த்தது லூயி ஆட்சி பதைத்து எழுந்தது! சார்லஸ் லாபூசியர் என்ற மக்கள் நடிகனைச் சிறையில் அடைத்தது!

சிறையிலேயாவது அமைதியாக இருந்தாரா அந்த நடிகர்? மற்ற கைதிகளையும் சேர்த்துக் கொண்டு அங்கும் அன்றைய பிரான்ஸ் நாட்டின் கொடுங்கோற் சம்பவங்களை விளக்கி நாடகமாடியவாறே இருந்தார்!

அதன் எதிரொலி என்ன ஆயிற்று தெரியுமா? லூயி ஆட்சியை எதிர்த்து பிரெஞ்சு மக்கள் நடத்திய புரட்சியில் பாஸ்டில் என்ற அந்த கொடுமைச் சிறைக் கூடம் தூள் தூளாக்கப்பட்டது.