பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 93

'பாஸ்டில் என்ற காரக்கிரகம் தகர்த்தெறியப்பட்ட காரணங்களுள் ஒன்றுதான்், சார்லஸ் லாபூசியர் என்ற அந்த நடிகன் நடித்த நாடகங்களின் எழுச்சிமிக்க உணர்ச்சிகனே' என்று நாவன்மை படைத்த மேடைப் பேச்சாளர் வால்டேர் மேடைகள் தோறும் முழங்கினார்:

அந்த மாபெரும் நாடகப் புரட்சி வீரனைப் போல, மக்கள் நாயகர் எம்.ஜி.ஆர். மக்கள் உரிமைக்காக அரசியல் பிரிவில் போராடினார்!

தமது திரைப்படங்களிலே, நாடகங்களிலே, கதை அமைப்புகளிலே, உரையாடல்களிலே, காட்சிகளிலே, பாடல் களிலே, சமுதாய எழுச்சி மிக்க கருத்துரைகளைத் திணித்தும்; தான்ாக மற்றவர்களை சித்தரிக்கும் சூழ்நிலைக்குப் பக்குவப் படுத்தியும் புரட்சி செய்தார் எம்.ஜி.ஆர்.

படம் எடுக்கும் முதலாளியாகவும், இயக்குநராகவும், நடிகராகவும், அரசியல்வாதியாகவும், கொடை வள்ளலாகவும், கட்சி நடத்தும் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இறுதியாக தமிழ்நாடு முதலமைச்சராகவும் அவர் வாழ்ந்தபோதெல்லாம், சரிகை துப்பட்டா வாழ்க்கை வாழாமல், தரித்திர நாராயணர்களின் வாழ்க்கைகாகவே புரட்சிக் குரல் கொடுத்தார் புரட்சி நடிகர்.

பிரெஞ்சு மக்களுடைய உள்ளங்களிலே லாபூசியர் தனது நாடகங்கள் மூலமாகப் புரட்சி வித்துக்களைப் பரவலாகத் தூவிப் பக்குவப்படுத்தினார்.

தமிழக மக்களுடைய இதயங்களிலே புரட்சி நடிகர் நாடகம், திரைப்படங்கள், பாடல்கள், வசனங்கள், மக்கள் சேவைகள், மூலமாகத் தனது புரட்சி வித்துக்களைப் பரவலாகத் துவி வைத்தார்!

சர் லாபூசியர் வெளியே இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த லூயி ஆட்சி, அவரைப் பிரான்ஸ் நாட்டின் நாடாளு மன்ற உறுப்பினராக்குவதன் வாயிலாக அவர் உணர்வை ஊமையாக்கிட செயல்பட்டது.