உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 துன்பமே கிறைந்தது-நிலைத்தது-இப்பெரிய உலகம். எரிகின்ற காணலாகவும் விரிகின்ற பாலை வனமாகவும் விளங்குவது இந்த வையகம். இதில் திரிகின்ற மனிதர் கொஞ்சம் தங்கி உள்ளம் குளிர வும் உடல் குளிரவும் உதவும் மர நிழலாய்த் தழைத் திருப்பது இந்த மனமாட்சி-குடும்ப வாழ்வு. ஓயாமல் உழைக்கும் மனிதனுக்கு உண்டாகும் தாகம் நீங்கி அவன் உள்ளத்தைக் குளிரவைக் கும் மாசில்லாத ஊற்று இந்த மனையறம். போகும் வழியில் அலைவுசெய்து அடித்துப் பிடித்துத் துன்பம் செய்யும் திருடன் போன்ற ஐம்புல வேடர் கள் அவதி அதிகமானுல் போகும் வழி-ஒழுக்கம் கிறைந்த உயரிய வழி-இன்பம் கிறைந்து இயங்க உற்ற துணையாகி நெறிமுறை காப்பது இம்மனை வாழ்க்கைதான். வாழ்க்கையில் மேலும் மேலும் செய்துகொண்டே போகும் முயற்சிகளில் அயர்ச்சி தோன்றிகுல ஊன்றுகோலாய் இருந்து ஊக்கம் கொடுப்பது இந்தக் குடும்ப வாழ்க்கைதான். எல் லோரையும் கல்லோராக்கி மண்ணுலகத்து இன்பத் திற்கெல்லாம் அளவுகோலாகி விண்ணுலகத்து இன் பத்தை எல்லாம் வழங்கும் இன்ப ஒவியமாய் விளங் குவதும் இந்த இல்வாழ்க்கைதான். ஆம்; எல் லோர்க்கும் எல்லாம் பாலிப்பது இந்த இல்வாழ்க்கை. இத்தகைய இல்லறத்தின் இன்னுயிர் அன்புஅன்பு-அன்பு, காதல்-காதல்-காதல். அன்பு என்பதும் காதல் என்பதும், வெறுஞ் சொற்களல்ல. இரும்பும் காந்தமும் ஒன்றனைஒன்று கவ்விப் பற்றிக்கொள்வதுபோல தலைவன் தலைவி