பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

காட்சி-27

இடம் : கந்தர்வலோகம்

(காந்தரூபன் கனவில்; மங்கையர்க்கரசி முக் காடிட்டபடி, ஒரு குளக்கரையின் பக்கம் வர, அவளைப் பார்த்து)

காந்தரூபன் : கண்ணே தெய்வருபத்தைத் திரையிட்டு மறைப்பானேன்! ஒஹோ! உன் வதனத்தின் விசித்திரங்களே...வானம் திருடிக்கொள்ளுமென்று? அதிருக்கட்டும்-இப்படி வெகு கேரங்கழித்து வருகிறயே என்னே விரகத்தால் வேதனைப்படுத்த வேண்டும் என்பதுதானே உன் விருப்பம் ?

மங்கையர்க்கரசி இல்லை ப்ரபு உங்களைத் துன்பப் படுத்த, என் இதயம் இடந்தருமா ? ஸ்வாமி வானம், இப்போதுதான் என் விழிகளுக்கு, வர்ணம் வைத்தது. பளிங்கு ஒடை, இப்போ துதான் என் பாதச் சிலம்புகளுக்குப் பாடல் கற்றுக் கொடுத்தது. காயாம்பூவிடம் கன்னம் கொஞ்ச நேரம் கதை பேசிக்கொண்டிருந்தது.

காந்த : கட்சத்திரங்கள் உன்னை, காட்டியமாடச் சொல்லியிருக்கும். சந்தனச் சந்திரன், உன்னேச் சங்கீதம் பாடச் சொல்லியிருக்கும்...ஏன்! அப்படித் தானே!

மங்கை : போங்கள் எதற்கெடுத்தாலும் கேலிதான் !

காந்த : அடேயப்பா வந்துவிட்டதா? மங்கையர்க்கரசி கோபம் கொஞ்ச நேரம் உள்ள பைத்தியம்

என்பதை நீ அடிக்கடி மறந்துவிடுகிருய். இந்தக்