பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

மங்கை : மகனே! ஒரு வேசி விட்டில் காலங்கழித்தேன் என்பதற்காக, நான் விபசாரியா? அப்பா...... பாம்பின் சட்டையில் உண்டாகும் அழுக்கு, அந்தப் பாம்புக்குச் சம்பந்தம் உண்டா ?

சுதா : முள் இல்லாத ரோஜா. மயக்கம் தராத மது. இதை யார் கம்பமுடியும்? பத்தினி என்பதை. நிரூபிக்காதவரையில் நீ விபசாரிதான்.

மங்கை ; அப்பா! என் நியாயத்தை நிரூபிக்க, எந்த அத்தட்சியும் இல்லை. என் அழுகைதான் இருக்கிறது.

புலிகேசி : அழுகை...அதுதான், பெண்கள் செய்யும் சுலபமான தொழிலாயிற்றே! இளவரசே!...ஒரு மஹா யுத்தம் சாதிக்கமுடியாத காரியத்தை...ஒரு பண், தன் கண்ணரால் சாதித்துவிடுவாள்... இவள் அழுகைக்காக அனுதாபங்காட்டினுல்...

சுதா 1 அரசாங்கத்தின் வாள், இந்தத் தடவையும்: ஏமாந்துவிடும். இரண்டாவது மரணத்திலிருந்தும் தப்பித்துவிடுவாள்.

மங்கை : மகனே! நான் மரணத்துக்கு அஞ்சவில்லை... மரணம்...வாழும் கேரத்துக்கு வரும், ஆய்வுதானே மரணம். வானத்துக்கு இருட்டும்; வாளுக்குக் கவசமும்; விதைகளுக்கு பழமும், ஏன் தெரியுமா?... ஒய்வு, எல்லாவற்றிற்கும் உண்டு என்பதை. உணர்த்திக் காட்டத்தான்.

சுதா : ஒரு மஹா ஞானிக்குக்கூட, உன்னைப்போல்

தத்துவம் பேசத்தெரியாது.

புலிகேசி ; இது தத்துவமல்ல இளவரசே தப்பித்துக் கொள்வதற்கு உபயோகிக்கும் தந்திரம். இவள்