பக்கம்:மச்சுவீடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித் தெய்வம்

பிள்ளையாரும் கலைமகளும் எல்லாச் சாதியாரும் வாழ்த்தும் தெய்வங்கள். பிள்ளையார் சதுர்த்தியும் ஆயுத பூஜையும் பாமர மக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் திருநாளாகும். ஆயுத பூஜையன்று தொழிலாளிகளுக்கெல்லாம் அளவு கடந்த உற்சாகம். அன்று அவர்களுக்குத் தொழிலில் ஓய்வு; தொழிலுக்கு உதவும் கருவிகளையெல்லாம் துலக்கிச் சந்தன குங்குமம் இட்டு அவர்கள் வழிபடுவார்கள். அவர்களுக்குக் கண்கண்ட தெய்வமல்லவா அவை?

தொழிற் கல்வியைப்பற்றி இன்று ஆரவாரித்துப் பேசுகிறார்கள். பழங் காலத்தில் இலக்கியத்தைப் போற்றும் அறிஞர்கள் கலைமகளை வழிபடும் போது. தொழிலாளிகளும் ஆயுத பூஜையையே கலைமகள் வழி பாடாகச் செய்து வந்தார்கள். இன்னும் நம் நாட்டில் பாமரர்கள் இதை விடவில்லை. அவர்களுக்குக் கலை மகள் ஆயுதங்களிலே கோயில் கொண்டிருக்கிறாள்.

புத்தகங்களைப் படிக்கும் நமக்குக் கலைமகள் அந்தப் புத்தகங்களில் இருக்கிறாள். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள் புத்தகங்களை அடுக்கி வைத்துச் சந்தன குங்குமம் இட்டு அவற்றையே சரஸ்வதி தேவியாக எண்ணிக் கும்பிடுகிறார்கள்.

கலைமகளை உபாசனை செய்த புலவர்கள் பலர் இருக்கின்றனர். கம்பர், ஒட்டக்கூத்தர் இருவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/17&oldid=1302261" இலிருந்து மீள்விக்கப்பட்டது