பக்கம்:மணமக்களுக்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



13

புதிதாக இல்லறத்தில் வலது காலை எடுத்து வைக்கும் மணமக்கள், இதை உள்ளத்தே வைத்துத் தம் வாழ்க்கையைத் தொடங்கியாகவேண்டும். சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்ளுகிறவர்களுக்குப் பொறுப்பு அதிகம் என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.

வாழ்த்துப் பலிக்க

நல்லவர்கள் வாழ்த்துவதினாலேயே நாம் வாழ்ந்துவிடலாமென்று மணமக்கள் நம்பிவிடக் கூடாது. அப்படி நம்பினால் ஏமாற்றமடைவார்கள். நல்லவர்களின் வாழ்த்துதலுக்கேற்ப மணமக்கள் உறுதியாகவும் திறமையாகவும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தலைவர்களின் வாழ்த்துக்களும் பலிக்கும்.

இல்லறம்

நான் ஒரு நாடோடி. 70 ஆண்டுகளுக்கு மேலாக நாடு முழுவதும் அலைந்து திரிந்து சுற்றிப் பார்த்திருக்கிறேன். இந்துக்கள் அல்லாத இஸ்லாமிய, கிறிஸ்தவ,புத்த,சமண பார்சியக் குடும்பங்களிலெல்லாம் கணவன் மனைவி சன்டைகள் மிகக் குறைவு, பாழ்பட்ட நம்முடைய சமுதாயத்தில்தான் கணவன் மனைவி சண்டைகள் மிகமிக அதிகமாக இருக்கின்றன இதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் திருமணக் காலங்களில், அவரவர்களின் மதகுருமார்கள், வாழ்க்கை என்றால் என்ன? வாழ்வது எப்படி? என்பதை உணர்த்தி, மணமக்களுக்கு அறிவு ரையும் கூறி வாழ்க்கையில் ஈடுபடுத்துகிறார்கள்.

ஆனால் நாமோ,அறியாத ஒருவரைக் கொண்டுவந்த வைத்து, தெரியாத சடங்குகள் எதை எதையோ செய்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/15&oldid=1307419" இலிருந்து மீள்விக்கப்பட்டது