பக்கம்:மணமக்களுக்கு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

யினை அவர் பின்பற்றிச் சமரசநெறியில் சமயத் கொண்டு ஆற்றி வருகின்றார். "மணமக்களுக்கு" என்ற அவரது அரிய நூல், அவரது சமூகப் பணியினை விளக்கும் சான்றுகளில் ஒன்றாக அமைத்துள்ளது.

முத்தமிழ்க் காவலர் அவர்கள் எழுதியுள்ள 'மணமக்களுக்கு" என்ற நூலினைப் படித்து மகிழ்ந்தேன். திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் கடந்த 47 ஆண்டுகளாக, இதுவரை சற்று ஏறக் குறைய 2300 தமிழ்த் திருமணங்கள் நடத்தி யுள்ளார் என்பதை இந்நூலின் வாயிலாக அறிந்து வியந்து மகிழ்ந்தேன். இந்நூலில் இல்லறம்: சகிப்புத்தன்மை, புகுந்த வீடு, ஆணுக்குக் கற்பு சிக்கனம், சேமிப்பு, ஒழுக்கம், மகட் கொடை, குழந்தை வளர்ப்பு முதலிய இன்னோரன்ன பிற சிறு தலைப்புக்கள் மூலம், ஆசிரியர் பல திருக்குறள் மேற்கோள்களுடன் தமிழ்த் திருமணம் பற்றியும், மணமக்களுக்குக் கூறவேண்டிய அறிவுரைகள் பற்றியும், நன்கு விளக்கியுள்ளார். திருமணக் காலத்தில் மணமகனும் மணமகளும் தம் தாய்மொழியில் சில உறுதிமொழிகள் கூறுதல்வேண்டும் என இந்நூலாசிரியர் கூறுவது சிறந்த கருத்தாகும். இதற்கு இலக்கியச் சான்றும் உள்ளது. சீதை அநுமன் வாயிலாக இராமபிரானுக்குச் சொல்லி அனுப்பிய செய்திகளுள், இராமபிரான் கூறிய திருமண உறுதிமொழியும் ஒன்றாகும்.


"வந்தெ னைக்கரம் பற்றிய வைகல்வாய்
இந்த விப்பிற விக்கிரு மாதரைச்
சிந்தை யாலுந் தொடேனென்ற செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்


(சூளாமணிப் படலம்—34)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/7&oldid=1525837" இலிருந்து மீள்விக்கப்பட்டது