பக்கம்:மணமக்களுக்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

'அநுமனே? இராமபிரான் என்னை மிதிலையில் திருமணம் செய்துகொண்ட நாளில், இப்பிறப்பில் உன்னைத் தவிர வேறு மாதரைச் சிந்தையாலும் தொடேன்' என்றுகூறிய உறுதி மொழிகளை நீ அவருக்கு நினைவூட்ட வேண்டுகின்றேன்" எனச் சீதை கூறியதாகக் கம்பர் கூறுவது ஈண்டுச் சிந்திக்கத் தக்கது.

இந்நூலில், ஆசிரியர் ஆண்கற்பினைப்பற்றி, வள்ளுவர் கூறும்,

"ஒருமை பகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு"

(பெருமை-4)

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நன்கு விளக்கியுள்ளார். ஆண் கற்பினைப்பற்றித் திருவள்ளுவர் மற்றோர் இடத்தில்,

"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஓழுக்கு"

(பிறனின் விழையாமை—8)

எனக் கூறியதும் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. இந் நூலாசிரியர், இந்நூலில் இல்லறத்திற்குப் பொருத்தமான பல திருக்குறள் பாக்களை விளக்கிக் கூறும் முறை சாலவும் போற்றத்தக்கது. இந்நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் M A., B L, அவர்களும், தமிழ்த் தென்றல் திரு. வி. கலியான சுந்தர முதலியார் அவர்களும் நடத்திவந்த தமிழ்த் திருமண முறைகளைத் தமிழ் மக்கள் பின்பற்றித் தமிழ்ப் பண்பாட்டினைப் போற்று-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/8&oldid=1525839" இலிருந்து மீள்விக்கப்பட்டது