பக்கம்:மணிவாசகர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நிலையில் நின்றொழுகி நமது அடிகள் அருளிச் செய்த திருவாசகத்தின்கண் அவர் அன்பர் என்பதற்கு அகச்சான்று கள் அகப்படாவென்பது ஒருதலை. அம்மட்டுமன்றி, மேற் காட்டிய காரணங்களால் அதற்கு மறுதலையாய சான்று கள் நிறையக் கிடைக்கும் என்க. அவை, 'ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பிலை" 'அலவா கிற்கும் அன்பிலேன்' 'நெகும் அன்பில்லை கினைக்கான" "இல்லை கின்கழற்கு அன்பு தென்கணே கான்தனக்கு அன்பின்மை நானுந் தானுமறிவோம் தானெனை யாட்கொண்டது எல்லாருங் தாமறிவார்” என்பன. இன்னும் அடிகள், கண்ணப்பு னொப்பதோ ரன்பின்மை கண்டபின் என்னப்ப னென்னொப்பி லென்னையுமாட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் வீற்றற்கே சென்று தாய் கோத்தும்பி" என அருளியதுங் காண்க. இப்பாட்டிற்கு, கண்ணப்ப நாயனாரின் அன்பு போன்று தம்மிடத்து அன்பில்லை என அடிகள் கூறினார் எனப் பொருள் கொண்டு, கண்ணப்பர் அன்பிற் றலைசிறந்: தவராகலின், அவரினும் சிறிதோ அன்றிப் பெரிதோ குறைந்த அன்பு தம்மிடத்திலும் உண்டு என்பதே அவர் கருத்து எனக் கொள்ளலாகாதோ' எனின், மேற்காட்டிய தொடர்களுடன் முரணுதலின் அது பொருளன்றென்க. ஆயின், 'முரணாதபொருள் என்னை யெனிற் கூறுதும். இதன் பொருள்:- . கண்ணப்பன் ஒர் (அன்பு உண்மை) ஒப்பது-கண்ணப்ப நாயனாரின் ஒப்பற்ற அன்புண்மை போல்வதாகிய, (என்) அன்பு இன்மை கண்டபின்-அடியேனது அன்பின் இன்மை யைக் கண்டபின்னும், என் அப்பன்-அடியேன் உயிர் தக் —7 - 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/105&oldid=852410" இலிருந்து மீள்விக்கப்பட்டது