பக்கம்:மணிவாசகர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தையாகிய இறைவன் என் ஒப்பு இல் என்னையும்-(அன்பின் மையில்) எனக்கு ஒப்பாவார் எவரும் இன்மையைப்பெற்ற அடியேனையும், ஆள் கொண்டு அருளி=(திருப்பெருந்துறை யில்) அடிமையாகக்கொண்டு ஞானோபதேசஞ் செய்தருளி, வண்ண=அழகு பொருந்த, என்னை வா என்று பணித்த= அடியேனைத் தில்லைக்கு வரக்கடவாயென்று பணித்தருளிய வான் கருணை =பேரருளையுன்டய, பொன் சுண்ணம் நீற்றற்கே=பொன்போலும் திருமேனியின்கண் பொடியா கிய வெண்ணிறணிந்தருளிய சிவபெருமானுக்கே, கோத் தும்பீ= அரசவண்டே, சென்று ஊதாய் = நீ போய்ப் பாடு வாயாக: என்றவாறு. * * "கண்ணப்பன்' எனவும், 'அன்பின்மை' எனவும் வருவத :னால், 'என்' என்பதும் அன்புண்மை என்பதும் வருவித் துரைக்கப்பட்டன. ஒப்பது மறுதலையுவமை; அது. அவன் ன்ப்படி நல்லவர்களிற் சிறந்தவனோ, அது போலவே யான் தீயவர்களிற் சிறந்தவன் என் புழி வரும் அதுபோல என்பது போல்வது கொடுப்பது உம்' என்னுந் திருக்குறள் விளக்கவுரையில் ஆங்கு' 'மறு தலையுவமம்' என்றார் பரி மேலழகர். உம், தொகுத்தல். என்னப்பன்' என்றார்:தம்மை ஆட்கொண்டது அவன் கடமை என்பதனை அறிவித்தற்கு. என்னை? சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய உடல்தந்தையும். நெறியில்லா நெறி செல்லும் தன் புதல்வனை ஆட்கொண்டு நன்னெறிப் படுத்தித் தன் பொருளை அவனுக்கு அளித்தல் தன் கடமையென்று கருதுதல்,கண்கூடாமல்லவா! மறித்தும் என்னொப்பில்' என்றார்; அன்பின்மையில் தமக்கு நிகரா வார் யாருமில்லை என்பதை யாப்புறுத்தற்கு. ‘என்னையும்" என்றதிலுள்ள இழிவு சிறப்பும்மையால், அன்பின்மையால் அவனால் ஆட்கொள்ளப் பெருந் தகுதியற்ற தமது இழிவைப் புலப்படுத்தினார்: என்னை? பத்தி வலையிற் படுவோன்' எனவும், யாவராயினும் அன்பராலன்றி அறி. யெர்னா மலர்ச் சோதியான் எனவும் அவ்வடிகளே கூறுத லால் என்க. அங்ங்னந் தகுதியற்ற தம்மை ஆட்கொள்ளு 1ος

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/106&oldid=852412" இலிருந்து மீள்விக்கப்பட்டது