பக்கம்:மணிவாசகர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எந்தமை யாண்ட பரிசது பகரின் ஆற்ற லதுவுடையழகமர் திருவுரு கீற்றுக் கோடி கிமிர்ந்து காட்டியும்' என வரூஉம் அடிகள் கூற்றாலே அறிக. அவ்வளவு கண்கவர் வனப்பினதாகலின் அடிகள் பின்னும் பல விடங்களில் கூறு வர்; அவற்றுட் சில: "றுேபட்டே யொளி காட்டும்பொன்மேனி நெடுந்தகையே" "ஒண்மையனே திருநீற்றை யுத்துளித் தொளி மிளிரும் வெண்மை யனே' "செய்யா வெண்ணிறாடி’ "வெண்ணிற்றர் செம்மேனியர்' "துப்பனே தூயாய் தூயவெண்ணிறு துதைக் தெழு துளங்கொளி வயிரத் தொப்பனே' என்பன. பவளம் போல் மேனியிற் பால் வெண்ணிறும்" என்பது ஆளுடைய அரசின் அருளிப்பாடு. செம்மேனி வெண்ணிற்றான்" என்பர் சேக்கிழார். "அவ்வப்போது ஒரு கண நேரம் சத்தியத்தின் தோற். றத்தைக்கண்டது கொண்டு, அதன் அளவிலா ஒளியினியல்பை நாம் அறிந்துகொள்ள முடியாது.நாம் தினந்தோறும் பார்க் கும் சூரியனுடைய பிரகாசத்தை விடக் கோடி மடங்கு ஜோதியுடையது சத்தியம். அந்தப் பரஞ்சோதியில் நான் கண்டது அணுவிலும் அணுவான ஒளிக்கிரணமேயாகும். ஆனால் என்னுடைய சோதனைகள் அனைத்தினுடையவும் பயனாக ஒன்று நான் உறுதியாகச் சொல்லமுடியும்; அது கோடி சூரியப் பிரகாசமுடைய சத்தியமென்னும் ஜோதி யைப் பூரணமாகத் தரிசனம் செய்யவேண்டுமானால் அஹிம்சா தர்மத்தையன்றி அதற்கு வேறுசாதனம் இல்லை i08

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/108&oldid=852416" இலிருந்து மீள்விக்கப்பட்டது