பக்கம்:மணிவாசகர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொற்றிரள் மணிக் கமலக்கண் மலரும் பொய்கை சூழ் திருப்பன்கூ ருளானே' 'எறிந்த சண்டி யிடந்த கண்ணப்ப னேத்தும் பத்தர்கட் கேற்றம் கல்கினீர்" - * கடியார் கணம்புல்லர் கண்ணப்ப ரென்றி வர்கள்' (ஒன்பதாந்திருமுறை, பூ நம்பி காடநம்பி) 'கான வேடுவன் கண்பரிங் தப்ப வானகாடு மற்றவர்க் கருளியும்' 'நேசத்தால்: வாயினிர் கொண்டு மகுடத் துமிழ்ந்திறைச்சி ஆயசீர்ப் போனகமா ஆங்கமைத்துத்-தூய சீர்க் கண்ணிடங்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து விண்ணுலக மீந்தவிறல் போற்றி" (பதினோராந்திருமுறை-நக்கீரர்) 'சென்றுசெருப்புக்காலாற் செல்ல மலர்நீக்கிச் சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச்-சென்றுதன் கண்ணிடந்தன் றப்புங் கருத்தற்குக் காட்டினான் கண்ணிடந்தன் றப்பாமைப் பார்த்து" (பரண தேவநாயனார் 'ஏவுசெய் மேருத் தடக்கை யெழிற்றில்லை யம்பலத்து மேவுசெய் மேனிப் பிரானன்றி யங்கணர் மிக்குளரே காவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத் தேவுசெய் வான்வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே' - - (நம்பியாண்டார் நம்பி) 'கல்லெறிந் தானும்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த கல்லறி வாளனு மீளா வழிச்சென்று கண்ணினரே' என்பன. இவையன்றிப் பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணத்து அவர் வரலாறு விரித்துக் கூறப் படுகின்றது. இதுவன்றிப் பதினோராந் திருமுறையில்'திருக் கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயரிய இரண்டு I 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/113&oldid=852428" இலிருந்து மீள்விக்கப்பட்டது