பக்கம்:மணிவாசகர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயப் பெருங்குரவர் நால்வரின் பெருமைகளை நன் குணர்ந்து அவர்கட்குப் பப்பத்துப் பாக்களாலாகிய ஒவ் வொரு மாலை சாத்தி, அல்லும் பகலும் ஆண்டவனை நோக்கிக் கதறிக் கதறி அழைத்துத் தம் அன்பனைத்தையும் பாட்டு வடிவங்களாக்கி மறைந்தருளிய இராமலிங்க அடிகளே தாம் அறியவில்லையென்று கூறுவாரானால் புழுத்த நாயினுங் கடையனான யானோ அறிந்து கூறவல் லேன்? அவ்விராமலிங்கனார், அடிகளின் பொருட்டு ஆண்ட வன் மண்சுமந்து அடிபட்ட பகுதியில் ஈடுபட்டுக் கூறுவ தாவது: 'வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்டநின் பொன்பட்ட மேனியிற் புண்பட்ட போதிற் புவிநடையாங் துன்பட்ட வீரரந்தோ வாத ஆரர்தங் தூயநெஞ்சம் என்பட்ட தோவின்று கேட்டவென் னெஞ்ச மிடிபட்டதே' என்பது. இப்பெரியார் இச்செய்யுளின்கட் பெய்துவைத்த சுருங் கிய சில சொல் நுட்பங்களால், தம் இழிவையும் அடிகளின் உயர்வையும், ஆண்டவன் மண்சுமந்து அடிபட்டகாலை அடிகளின் திருவுள்ளம் அளவிறந்த துன்பமடைந்திருக்கும் என்பதையும் விளக்கும் அழகு காணத்தக்கதாகலின் இதன் பொருளைச் சிறிது விரித்துக் காண்போமாக. இதன் பொருள்:- வன்புகஅட்ட கூடலில்= (போக்குதற்கரிய) பல தீவினைகளைப் போக்கிய மதுரை மாநகரின் கண், வான் பட்ட வையை= வானுலகத்தை அளாவுமாறு பெருகி வந்த வையை யாற்றிற்கு, வரம்பு இட்ட நின்=கரை சுமத்தும் பொருட்டு மண் சுமந்த தேவரீரது, பொன்பட்டமேனியில்= பொன் போலுந் திருமேனியின் கண், (அன்று) பட்டபுண் = தேவரீர் வாதவூரடிகளின் பொருட்டுக் கூலியாளாக வந்து மண்சுமந்த அக்காலத்தில்(பாண்டியன் ஒச்சிய பிரம்படியால்) உண்டான புண்ணை, இன்று கேட்ட=இஞ்ஞான்று வர லாற்று வாயிலாகக் கேட்ட, என் நெஞ்சம்=(உலகப் பற் 129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/129&oldid=852461" இலிருந்து மீள்விக்கப்பட்டது