பக்கம்:மணிவாசகர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரும்பனும் விரும்ப கின்ற கட்டழ குடைய யென்பார் அரும்பெற லிவன்றான் கூலிக் காட்செய்த தெவனோ - வென்பார். இரும்பெருங் குரவ ரற்ற தடியனோ வென்பார் வேலை புரிந்தவ னல்ல னென்யா ரதுமேனி புகலு மென்பார்' எனப் பரஞ்சோதி முனிவர் கூறுதலாலென்க. புண்பட்டபோதில்' என்றது இறைவன் உடல், என்பு இறைச்சி முதலிய எழுவகைத் தாதுக்களாலாக்கப்பட்ட மக்களுடல் போலாது அருளாலாக்கப்பட்டதாகலின் அது புண்படாது என அறிந்துவைத்தும், அன்பின் மேலீட்டால் அதனை மறந்து கூறியவாறு; அன்றியும், "மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்கா ணம்மானாய்' எனவரும் அடிகளின் திருவாசகத்தை அடியொற்றிப் 'பொன்பட்ட மேனியிற் புண்பட்ட போதில்' என்றது. உங் காண்க. 'புவிநடையாம் துன்பு அட்ட வீரர் என்றார்; அடிகள் ஆண்டவன் திருவடியை இறுகப்பற்றி, அதனால் உலகப்பற்றை ஒழித்தவரென்பதையும், அங்ங்னம் ஒழிக்க முயலுங்கால் உட்கருவிகளால் நேரும் பெரிய போரின்கண் வென்று வெற்றிபெற்றவரென்பதையுங் குறிப்பித்தற்கு பிறிதொரு இடத்தைப் பற்றிக்கொண்டே தான் முன் பற்றி யிருந்த இடத்தை நெகிழ விடுகின்ற ஒருவகைப் புழுவைப் போல உயிர்கள் தாம் பற்றியிருக்கும் உலகத்தை விட வேண் டுமானால் கடவுளைப் பற்றிக் கொண்டுதான் விட வேண்டு. மென்பதை, "பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு' ஒன்னுந் திருக்குறளானும், 18 !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/131&oldid=852467" இலிருந்து மீள்விக்கப்பட்டது