பக்கம்:மணிவாசகர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிகள் தமது அன்பிற்கு இவ்வாறு அளவின்றி ஒர் வரையறை செய்து கொண்டாராகலின் பெரும் பொருள் தேடக்கருதிய ஒருவன் முன்னரே தன்னிடமுள்ள பொருளைப் பொருளெனவே கருதாதது போலத் தமது ஒரு உள்ளம், ஒயாது உருகுவது தோன்றப் பெறாதவராய் நெஞ்சம் கல்லாம் என்றும், இரண்டு கண்களும் இடையறாது நீரொ ழுக்குதலை அறியாது கண்ணிணையு மரமாந்தீவினை பினேற்கே என்றும் அருளினரென்க. 'நூறாயிரம் பொற்காசுகள் ஈட்டினாற்றான் யான் ஒரு செல்வன்' என்னும் வரையறை செய்துகொண்டு தேடும்ஒருவன் அத்தொகையில் பத்துப்பொற்காசுகள் குறை யினும் அவன் தன்னை ஒரு வறியவனென்று சொல்லிக் கொள்வானேயன்றிப் பொருளுடையவனென்று சொல்ல மாட்டான்; என்னை? தான் வரையறுத்துக் கொண்டது அவ்வாறாகலின்: எனினும் அவனை ஏனையோர் ஒரு பெரும் பொருளுடையான்' என்று கூறுவாரேயன் றி வறிய வன்' எனக் கூறமாட்டாரென்பது கண்கூடு. அது போல, அடிகள் தாம் வரையறுத்தவாறு ஆகவில்லை எனக் கருதித் தம்மை அன்பில்லாதவன்' என்று பல விடங்களிலும் கூறின ரேனும் ஏனையோர் அவரை ஒரு பேரன்பர்’ எனக் கொள்ளுதலே ஏற்புடைத்தென்க. இது தமது வெற்றி ஒரோவழித் தோன்றினும் அது தாம் வரையறுத்தவண்ணம் இல்லாமையின் அதனைத் தாம் அடைந்ததாகக் கருதாதது பெரியாரியல்பில் ஒன்று என மேலே காட்டியதனுள் அடங்கும் என்க. இனி, நானுனக்கோ ரன்பனென்பேன்" 'உலப்பிலா அன்பருளி' என ஒரோவழி வருவன வெல் லாம் "அவர் தமது வெற்றியை மகிழ்ச்சி மேலிட்டால் தம்மை மறந்து ஒரோவிடத்துக் கூறிவிடுவர்' என மேலே காட்டியதனுள் அடக்கிக் கொள்க. ...。ギ - 141

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/141&oldid=852486" இலிருந்து மீள்விக்கப்பட்டது