பக்கம்:மணிவாசகர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் சமயம் யாது என்பதைக் குறிப்பாலும் காட்டாமல் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பொது மறையை ஆக்கித் தந்த ஒரு பெருமகனைச் சமயம், சாதி, காலம் என்ற கூட்டுக்குள் அடைப்பது எத்துணைத் தவறானது? காலத்தையும், தேசத்தையும், நடைமுறையையும், கடந்து முழுமுதல் போல் நிற்கும் ஒரு நூலை ஆக்கித் தந்தவன் யாவர்க்கும் பொதுவானவன் அல்லனோ? அவன் ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சமயத்தைப் பின் பற்றி வாழும் பெற்றோர்களின் பிள்ளையாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்திற்காக அவனை இன்ன சாதி, சமயத்தைச் சேர்ந்தவன் என்று முத்திரை இட்டுவிட முடியுமா? அவ்வாறு இடுவதால் சாதாரண மக்கள் அவனு டைய வாழ்க்கை வரலாறு காரணமாக அவனுடைய நூலை .யுமன்றோ படியாமல் ஒதுக்கிவிடுவர்! இவற்றை யெல்லாம் மனத்துட் கொண்ட நம்முன்னோர் ஒர் அற்புதமான செயலைச் செய்தனர். வள்ளுவன் என்ற தனிமனிதன் வேறு; அவன் ஆக்கித் தந்த நூல் வேறு. அந்த நூலின் உள்ளே, வள்ளுவனுடைய உயிர் நாடியாகிய கொள்கை, கருத்து, குறிக்கோள் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன. அப்படி இருக்க அவனுடைய உடம்புபற்றிய ஆராய்ச்சி நமக்கு எதற்கு? இவ்வாறு கருதியே நம் முன்னோர்கள் நூலை மட்டும் வைத்துக் கொண்டு நூலாசிரியனின் வாழ்க்கை க் குறிப்புக்களை மறையுமாறு விட்டனர் என்று நினைக்க வேண்டியுளது. மேலும், மிகச் சிறந்த நூலை ஆக்கித் தந்தவர்களைப் பற்றி அறிய நேரிடுகையில் நூலைவிட்டு அவர்களைப் போற்றும் மரபும் மக்களிடையே தோன்றிவிட இடமு ண்டு மனிதன் குறைபாடு உடையவன். எல்லா மனிதர்களும் தனி ஒருவனுடைய குற்றம் குணம் இவற்றை ஆராய்ந்து கண்டு தான் ஒரு முடிவுக்கு வருகின்றனர் என்று கூற முடியாது. Familosofis suự) tr@ (Personality cult) unsafs garš stav எளிதாகப் படியக்கூடிய ஒரு பழக்கம். சில காலத்துக்கு 148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/148&oldid=852499" இலிருந்து மீள்விக்கப்பட்டது