பக்கம்:மணிவாசகர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கையில் அரசுக்குரிய பொருளை வேறு வழியில் செலவு செய்தல் தவறு என்பதும், அங்ங்ணம் செய்தவர்கள் அரச தண்டனைக்கு ஆளாக வேண்டும் என்பதும் அவர் அறிந் திருந்த ஒன்று. அவ்வாறு செய்த ஒரு சிலரைத் திருவாத வூரரே அமைச்சர் என்ற முறையில் தண்டித்திருத்தலும் கூடும். எனவே தான், தம் அனுபவத்திலிருந்து கீழிறங்கிய வுடன் தாம் உலகியல் முறையில் செய்த தவற்றை நினைந்து அதன் பயன் யாதாய் விளையும் என அஞ்சுகிறார். இவ்வாறு அச்சங்கொள்ளும் அவர், துறவி மாட்டுத் தம்மை இழந்து நின்ற மணிவாசகர் அல்லர். அந்நிலை மாறிப் பழைய திருவாதவூரராய் நின்று பேசிய பேச்சுக்களாகும் இவை: எத்துணைப் பெரியவர்களாயினும் உலக நிகழ்ச்சிகள் வந்து மோதும்போது ஒரு வினாடி கலங்கத்தான் செய்கிறார்கள். அப்படியானால் நாமும் கலங்கத்தானே செய்கிறோம். அவர்களும் கலங்கினார்கள் எனில் வேறுபாடு எங்கே என்ற வினா எழலாம். மானுட உடல் எடுத்தமையால் கலக்கம் என்பது இருவருக்கும் பொது. ஆனால், அவர்கள் நம்மினும் வேறுபட்ட பெரியோர் கள் ஆகலின் உடனே அக்கலக்கத் தினின்றும் தெளிவுபெற்றுவிடுகிறார்கள். இந்த உண் மையை எடுத்துக் காட்டிய புலியூர் நம்பி சிறந்த புலவரா கிறார். தென்னவன் ஒலை வருமுன்னர் திருவாதவூரர் இருந்த உலகமும் அனுபவமும் வேறானவை. அந்த அனுபவத்தை அவரே திருவாசகத்தில், சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டு உன் திருவார்த்தை விரிப்பார்.....................................'(384) என்ற முறையில் பாடிக் காட்டுகிறார். இந்த அனுபவம் பாண்டிய ன் ஒலையைக் கண்டவுடன் சிதறி விடுகிறது. இந்நிலையில் யாரிட ஞ் சென்று முறையிடுவது? யாவும் அவனே என்று அவனிடம் உடல், பொருள், ஆவி அனைத் தையும் அடைக்கலமாகத் தந்துவிட்ட பின்னர் யாரிடஞ் 160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/160&oldid=852526" இலிருந்து மீள்விக்கப்பட்டது