பக்கம்:மணிவாசகர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்று முறையிட முடியும்? இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும் நீயே. ஆதலால், அடித்தது போதும்: அனைத்திடல் வேண்டும் அம்மையப்பா இனி ஆற்றேன் என்று இராமலிங்கவள்ளலார் தடித்தவோர் மகனை என்ற பாடலில் பாடிக்காட்டுகிறார். அதுபோலத் திருவாதவூரரும் இறைவனிடம் சென்று முறையிடுகின்றார். - இந்நிலையில் அவரும் நாமும் எதிர்பாராத ஒன்று நடைபெறுகிறது. இறைவன் அன்பனே! நீ அஞ்சத் தேவை இல்லை. குதிரைகள் வந்து சேரும் என்று பாண்டி யனுக்கு ஒலை அனுப்பிவிடு' என்று கூறிவிட்டான். "கினக்குயாம் உண்டு உளம்அஞ்சேல் நிலைமை உடனே - - கைதவற்கு கனத்த புரவிவரும் என்று கருணையுறவேண்டும் விட்டு' பனைப்பை ஒலை கிறைத்தெழுதிப் பரிவின் விடுப்பாய்' என்ற முறையில் நம்பி திருவிளையாடல் இதனைக் கூறு: கிறது. இதில் ஒரு வியப்பும் உண்டு. குதிரைகள் எதுவும் அங்கில்லை; குதிரை வாங்கக் கொண்டு வந்த பணமும் செலவழிக்கப்பட்டுவிட்டது; ஆனால், குதிரைகள் வரு மென்று ஒலை அனுப்பிவிடு என்று இறைவன் கட்டளை இட்டுவிட்டான். பழைய அமைச்சராக இருப்பின் குதிரை கள் ஏது? எங்கிருந்து வரும்? எப்போது வரும்? ஆகிய வினாக்களை நம்மைப்போல் எழுப்பிக்கொண்டு அல்லற். பட்டிருப்பார். - இதன் எதிராக அக்கட்டளையை அப்படியே ஏற்றுக் கொண்டு ஒலை அனுப்பிவிட்டார் திருவாதவூரர். இவ் வாறு செய்வதன் மூலம் அவருடைய நம்பிக்கை, ஆண்டான். அடிமைத்திறம் ஆகிய அனைத்தையும் நிரூபித்துவிட்டார். அடியவர்களுடைய நம்பிக்கை எத்தனை வலுவானதும் அசைக்கமுடியாததுமானது என்பதற்கு இதுவே எடுத்துக் காட்டு. பகுத்தறிவும் உலகத்தாரும் இயலாது என்று கூறு கிற ஒன்றை, நடவாததை, நடக்க வைப்பவன் என்தலைவன்' I61°,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/161&oldid=852528" இலிருந்து மீள்விக்கப்பட்டது