பக்கம்:மணிவாசகர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடப்பெற வில்லை. இவற்றை யெல்லாம் செயற்கருஞ் செயல்களாக இப் பெரியோர்கள் எண்ணாமையாலேயே அவைபற்றிய குறிப்புக்கள் அதிகம் இடம் பெறவில்லை. இப் பெருமகனின் வரலாற்றில் இவை நடைபெற்றன என்பதை அறிவுறுத்த இவை பயன்படுகின்றனவே தவிர இவற்றை அறிவதால் வேறு பயன் ஒன்றும் இல்லை. பரம் பொருளாகிய இறைவன் இச்சாமாத்திரத்தில் அனைத்துல கையும் வைத்து வாங்குபவனாகலின் இவை அரிய பெரிய செயல்கள் அல்லவே! எனவேதான் இவை பற்றிய விரிவான குறிப்புக்கள் தரப்பெறவில்லை. அவருடைய வரலாற்றிற் குத் தேவையான அகச் சான்றுகள் இருக்கின்றன. இச் செயற்கருஞ் செயல்களினால் மணிவாசகர் பெருமை பெற் றார் என்று நினைப்பது தவறு. இவை ஒன்றும் இன்றியும் திருவாசகம் மட்டும் பாடியிருப்பாரேயானாலும் அவர் பெருமை நிலைபெற்றிருக்கும். - இனி அடிகளாரின் காலம்;பற்றிய சில குறிப்புக்களைக் காண்டல் வேண்டும். மறைமலையடிகளின் 'மணிவாசகர் வரலாறும் காலமும்’ என்ற நூல் மிகப்பெரியது. பல்வேறு காரணங்களைக் காட்டி மறைமலை அடிகளார் மணிவாசகர் மூவர் முதலிகட்கும் முந்தியவர் எனக் கூறிப்போனார். இக்கூற்றை மறுக்கும் முறையில் 'தமிழ் வரலாறு எழுதிய சீனிவாசபிள்ளை மூவர்க்கும் பிற்பட்டவர் என்று கூறினார். முற்பட்டவராயின் சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையில் ஏன் வாதவூரர் இடம்பெறவில்லை என்ற வினாப் பெரிதாக இருக்கிறது. பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்” என்ற திருத்தொண்டத் தொகை யில் வரும் அடி திருவாதவூரரையே குறிக்கும் என்றும், நம்பியாண்டார் நம்பிகள் இதனை விளங்கிக் கொள்ளாமல் திருவந்தாதியில் தொகையடியாரைக் குறிக்கும் தொடராக இதனைக் கூறினார் என்றும், ஆதலால்தான் பின்னர் வந்த சேக்கிழார் இதுபற்றி ஒன்றுஞ் செய்ய முடியவில்லை 177

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/177&oldid=852560" இலிருந்து மீள்விக்கப்பட்டது