பக்கம்:மணிவாசகர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும், தம் கருத்தை, மணிவாசகர் வரலாறும் காலமும் முதல் முறை வெளிவந்த பொழுதே என் தந்தையார் பெருஞ் சொல் விளக்கனார் அ. மு. சரவணமுதலியா ரவர்கள் மறை மலை அடிகட்கு எழுதி அனுப்பினார்கள். அதனைத் தமக்குத் தக்க சான்று என்று குறிப்பிட்டெழுதிய மறை மலை அடிகள் அடுத்த பதிப்பில் அதனையும் சேர்த்துப் போடுவதாகத் திரு முதவியாருக்கு எழுதினார்கள். அது எவ்வாறாயினும் முதலியாரவர்கள் கூறிய முக்கிய மான இரண்டொரு கருத்துக்கள் இவண் அறியத் தக்கன. முதலாவது பொய்யடிமை இல்லாத புலவர் என்று வரும் அடி ஏழாம் பாடலில் வருகிறது. அப்பாடல் முழுவதும் தனியடியார் பட்டியலே தவிர தொகையடியார் பட்டிய லன்று. இதனாலும் சுந்தர மூர்த்திகள் பொய்யடிமை இல்லாத புலவர் என்று யாரைக் குறித்தார் என்பது ஆயத் தகுந்தது. - அன்றியும் திருத்தொண்டத் தொகையில்ஒரு சிறப்பைக் காண்டல் கூடும். ஒவ்வோர் அடியாரின் வாழ்க்கையையும் பருப் பொருளாக நோக்கும் பொழுது ஒரு கருத்துத் தோன் றும், அக்கருத்துத் தவறானதாக இருப்பின் சுந்தரமூர்த்தி அதனை மறுத்துரைக்கும் முகமாக ஒரு சொல்லைப் பெய்து பாடியுள்ளார். உதாரணமாகக் கண்ணப்பர் என்று எடுத்துக் கொண்டால் அவர் வேடர், கல்வி அறிவில்லாதவர் என்று நினைப்போம். இதை மறுக்கு முகமாகக் கலைமலிந்த சீர் நம்பிக் கண்ணப்பர்க்கு அடியேன்" என்று திருத்தொண்டத் தொகையில் பாடுவார். தண்டியடிகள் என்று கூறினவுடன் கண்கள் இல்லாதவர் என்று நினைப்போம். உடனே நாட் டம் மிகு தண்டி' என்பார் சுந்தரர். மெய்ப்பொருள் நாய னார் என்று கூறியவுடன் முத்த நாதனிடம் தோற்றுப்போன வர் என்ற எண்ணம் தோன்றும். இதனை மறுக்கும் முறை யில் வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருள் என்று கூறிச் செல்லும் திருத் தொண்டத் தொகை. இந்த அடிப்படையை மனத்துட்கொண்டு மணிவாசகர் வரலாற்றைக் கண்டால் 178

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/178&oldid=852562" இலிருந்து மீள்விக்கப்பட்டது