பக்கம்:மணிவாசகர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை ஓயாது பொய்யன் என்று அவர் கூறிக்கொள்வதை வைத்து அவர் குதிரை வரும் என்று பொய்யாகப் பாண்டி யனுக்கு ஒலை அனுப்பியவர் என்ற எண்ணம் தோன்றும். அதனை மறுத்துரைக்கும் முறையில் பொய் அடிமை இல் லாத புலவர்க்கும் அடியேன்” என்று கூறினார். அமைச்ச ராயிருந்தவரைப் புலவர் என்று கூறுதல் சரிதானே! ஆனால் தனியடியார்கள் அனைவரையும் பெயர் கூறியே பாடி வரும் பொழுது மணிவாசகரை மட்டும்புலவர்' என்ற பெய ரால் குறிப்பிடுவது ஏன் என்பன போன்ற வினாக்கட்கு. விடை கிடைப்பது அரிது. இக்கருத்து என் தந்தையாரவர் கள் எழுதியவையாகும். இக்கருத்துப்படி மணிவாசகர் தேவார மூவர்க்கும் முற் பட்டவர் என்றுகொண்டால் தேவார மூவருள் ஒருவராவது இவரைக் குறிப்பிடாத காரணம் யாது? சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையில் பொய்யடிமை இல்லாத புவவர் என்று குறிப்பிட்டது இவரையே என்று கொன் டால் அவர் தேவாரத்துள் யாண்டும் மணிவாசகர் பற்றிய குறிப்பு வாராமை ஏன்? பிற இடங்களில் திருவாதஆரர். பற்றிய குறிப்பு வரவில்லையாயினும் சிதம்பரம், மதுரை என்ற இரண்டு இடங்களுக்கு மூவரும் சென்று பாடியுள்ள னரே! அவ்வாறு சிதம்பரம் சென்றால் திருவாசகத்தின் பொருள் சிற்றம்பலக் கூத்தனே என்று காட்டிவிட்டு அவன் திருவடியடைந்த மணிவாசகரைப் பற்றிக் கேள்விப்படா மலா இருந்திருப்பார்? எங்கோ, என்றோ வாழ்ந்த காரைக் காலம்மையார், தலையால் நடந்த ஊர் என்று அஞ்சி அத ணுட் புகாது திருவாலங்காட்டு எல்லையில் நின்றே ஞான சம்பந்தர் பாடுகிறாரே. அவ்வாறு இருக்க மணிவாசகரை யும் திருவாசகத்தையும் பாடாமல் விட்டிருப்பார்களா? . சுந்தரமூர்த்திகள் நற்றமிழ் வல்ல. ஞான சம்பந்தன் என்று தொடங்கும் திருப்புன்கூர்ப் பதிகத்துள் உலகியல் நிலையில் நின்று காண்பார் குற்றம் என்று கூறக் கூடிய 179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/179&oldid=852564" இலிருந்து மீள்விக்கப்பட்டது