பக்கம்:மணிவாசகர்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே, காதல் உணர்ச்சியில் தான்' என்ற ஒரு பொருளை மற்றொரு பொருளிடம் முற்றிலும் பறிகொடுத்துப் பழகி விட்ட ஒருவன், நாளாவட்டத்தில் தான் எந்தப் பொருளி டத்துத் தன்னைப் பறிகொடுத்தானோ அதிலிருந்து நீங்கி மற்றோர் பொருளிடம் அன்பைச் செலுத்த முடியும். இவ்வாறு கூறுவதால் ஒருத்தியிடம் அன்பு பூண்டு பழகி யவன் நாளாவட்டத்தில் அந்த அன்பை வேறு ஒருத்தியிடம் செலுத்தலாம் என்று பொருள் கூறிவிட வேண்டா. ஒருத். தன் அல்லது ஒருத்தியிடம் தொடங்கும் அன்பு உண்மையில் வளர்ந்தால் அனைத்துலகிடமும் அருளாக விரியும். அப்படி விரியும் அன்பைக் கடவுள் மாட்டுச் செலுத்துதல் எளிதாக முடிகிறது. இதுகருதியே சிற்றின் பத்திலிருந்து பேரின்பம் செல்ல வழி உண்டு எனக் கூறினர் போலும் அன்பை ஒரு பொருளிடத்திலிருந்து மற்றொரு பொரு ளுக்கு மாற்றுவது முடியுமா? அது இயற்கையா என்பார் . ஒன்றைக் கவனித்தல்வேண்டும். தலைவனுக்காகவே தான் என்று தன் அன்பு முழுவதையும் அவனுக்கே கொட்டிக் கொடுத்த தலைவி ஒரு குழந்தை பிறந்தவுடன் தலைவனிடம் செலுத்திய அன்பில் ஒரு பகுதியை மடைமாற்றஞ் செய் கிறாள். இப்படியே ஒன்று ஒன்றாக அன்பு விரிகையில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மடைமாற்றஞ் செய்தல் எளிதாகிவிடுகிறது. அதுபோலவே தன்னலமற்ற அன்பை, அன்னவரிடமும் செலுத்திப் பழகிய பிறகு இறைவனிடம் அதனை மடைமாற்றஞ் செய்வது எளிதாகிவிடுகிறது. காதல் இலக்கியம், கடவுள் பக்தி இலக்கியத்தில் புகுந்த வரலாறு இதுதான். . இனி இலக்கிய நயஞ் செறிந்த திருக்கோவையாரில் புகுந்து அதிற் காணப்பெறும் சொல்லாட்சி, பொருளாழம், கற்பனை நயம், உவமைச் சிறப்புகள் என்பவற்றை நெடுகக் கூறிச் செல்ல வேண்டிய தேவை இல்லை. திருவாசகத்தில் காணப்பெறும் அழகு வேறு; திருக்கோவையாளில் காணப் பெறும் அழகு வேறு. w 229

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/230&oldid=852672" இலிருந்து மீள்விக்கப்பட்டது