பக்கம்:மணிவாசகர்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் பல பிறவிகள் எடுத்து விடுதலை அடைய வேண்டிய நிலையில் உள்ளவர்கள் நாம். ஆனால் மணிவாச கர் போன்றவர்கள் பல பிறவிகளையும் பிறந்து தாண்டிய வர்கள். எல்லாப் பிறப்பும் பிறந் திளைத்தேன் எம்பெரு மான் என்று அவரே கூறுமாறு போல இறுதிப்படியாக இப் பிறப்பை எடுத்துள்ளவர்கள். இவர் போன்றவர்கள் நம்மைப் போன்ற குற்றம், குணம் இரண்டும் உடையவர் கள். இவ்வாறு கூறுவதற்காக யாரும் சினக்க வேண்டா. குற்றம் ஒரு சிறிதும் குணம் மலைபோன்றும் உடையவர் இப் பெருமான். இன்னுங் கூறப்போனால் பாண்டிப் பேரர சின் தலைமை அமைச்சராயிருந்தமையின் அதிகார வர்க்கத் தினர்க்குரிய இயல்புகள் இருக்க வேண்டிய இடத்தில் அதி: காரத்தால் பாதிக்கப்படாத ஒருவர் என்று கூறவேண்டும். அறம் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும் பெறலறும். திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம் (அயோத்...மந்-சூழ்77) என்று கம்பநாடன் கூறுவதற்கு மாறாக எத்துணைப் பெரிய அதிகாரத்திலிருந்தும் சிந்தனை பிறிதாக ஆகாதவர். மணிவாசகரைப் பொ று த் த ம ட் டி ல் மாபெரும் அறிவாளியாக இருந்தமையின் அவருடைய பெருமையை அறிந்த மன்னன் அவரை அமைச்சராக ஏற்றுக் கொண் டான். உலகியல் வாழ்க்கையில் நன்கு தோய்ந்து வாழ்க்கை யின் நெளிவு சுளிவுகள் அனைத்தையும் நன்கு அறிந்திருந் தார் பெருமான். அவர் திருமணம் செய்து கொண்டிருந் தாரா இல்லையா என்பன போன்ற ஆராய்ச்சிகளில் நான் புக விரும்பவில்லை. பொறி புலன்கள் வழியாக இவ் வுலகை எங்ங்னம் ஒருவன் அனுபவிக்க முடியுமோ அப்ப்டி அனுபவித்தவர். அதிலும் அதிகாரத்தின் முடியில் இருந் தமையின் உலகையும் வாழ்க்கையையும். இவர் மிக நன்கு அனுபவித்திருந்தார் என்றே கருதுகிறேன். அதிகார வர்க் கத்தின் உச்சியிலிருந்து இன்பம், துன்பம், புகழ், இகழ் ஆகியவற்றின் எல்லைவரை சென்று அனுபவப் பட்டவர். எனவே அவருடைய சொற்கள் தம் அனுபவத்தை நேரிடை 236

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/237&oldid=852683" இலிருந்து மீள்விக்கப்பட்டது