பக்கம்:மணிவாசகர்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையை அவர் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற் றிருக்க வில்லையானால் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் அடியில் ஞானாசிரியனைப் பார்த்தவுடன் முழு மாற்றத்தை அவர் அடைந்திருக்க முடியாது. அடிப்படை செம்மையாக இருந்தாலொழிய ஒரு பெருமாற்றம் ஏற்பட வழி இல்லை. - இந்த அடிப்படையை நம் முன்னோர் நன்கு அறிந் திருந்தனராகலின் ஒரு பெரியார் ஒரு நாட்டின் ஒரிடத்தில் தோன்றினார் என்று கூற வரும்பொழுது அதற்குக்கூட ஒரு நிலைக்களம் அமைத்துப் பேசுகின்றனர். இராமன் பிறப்பதற்குக் கோசலம் தனியுரிமை யுடையதாகப் புலவன் கூறுகிறான். ஆசலம்புரி ஐம்பொறி வாளியும்..... நெறி யின் புறஞ்செலாக் கோசலம்புனை நாடு (பால 1) என்பது தொடங்கி அந் நாட்டில் 'வண்மை இல்லை; வறுமை இல்லை, இல்லாரும் இல்லை உடை யாரும் இல்லை என் றெல்லாம் நிலைக்களம் அமைப்பதன் மூலம் இராமன் பிறக்க ஏற்ற இடம் என்பதைக் கம்பன் கூறுவான். அதே போன்று திருஞானசம்பந்தர் அவதரித்தார் என்று கூறவேண்டிய இடத்தில் சேக்கிழார் இதே உத்தி யைக் கையாளுகின்றார். அவ்வூர் மரங்களும் ஆகுதி வேட் கும் தகையவால் (ஞான. புரா 7) என்று கூறுகிறார். வேதநெறி தழைத் தோங்கப் பிறப்பவர் தோன்றக் கூடிய நாட்டில் மரங்களும் ஆகுதி வேட்டல் முறைதானே! இவற்றை யெல்லாம் மனத்தில் வாங்கிக்கொண்டு பார்க் கும் பொழுது எந்த ஒன்றும் திடீரென்று தோன்று. வதில்லை. அது தோன்றுதற் குரிய சூழ்நிலை அமைந்தா லொழியப் புதியதொன்று தோன்ற முடியாது என்பது விளங்கும். திருவாதவூரர் என்ற பாண்டிய நாட்டின் முதலமைச்சர் திருப்பெருந்துறையில் ம. ர த் த டி யி ல் ஒருவரைச் சந்தித்தவுடன் திடீரென்று முழுமாற்றம் பெற்று மணிவாசகராக ஆகிவிட்டார் என்று கூறுவது பொருத்த முடையதாகத் தெரியவில்லை. 238

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/239&oldid=852686" இலிருந்து மீள்விக்கப்பட்டது