பக்கம்:மணிவாசகர்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறித்துப் பாடிய கையறுநிலைப் பாடல்கட்கும் உள்ள வேறுபாட்டைப் படிக்கையிலேயே நாம் உணரமுடியும். இப்பாடல் தோன்றி இரண்டாயிரம் ஆண்டாயினும் இது நம் மனத்தைக் கவர்ந்து ஈர்ப்பது எதனால்? அவர்கள் நிகழ்ச்சியை நேரே கண்டு உணர்ச்சிப் பெருக்கத்தால் அப் பொழுதே பாடினர். அதனால் அப்பாடல் அவர்களுடைய உணர்ச்சியை அப்படியே தாங்கி நிற்கின்றன. ஆனால் பாரியின் இறப்புக் குறித்து இன்று வரலாற்றில் படிக்கின்ற ஒருவர் கையறுநிலை பாடினால் எத்துணை முயன்றாலும் இத்துணை உணர்ச்சிப் பெருக்கத்தைப் பெற முடியாது. மேலும் நிகழ்ச்சியில் தொடர்பு பட்டவர்கள் பெறும் உணர்ச் சியின் ஆழத்தளவு பிறர் பெறவும் முடியாது. - இந்த அடிப்படையில்தான் திருவாசகம் தோன்றியது" மணிவாசகர் தம் வாணாள் முழுவதும் விரும்பிய ஒன்றைத் திருப்பெருந்துறையில் பெற்றார். தம்மை மறந்து ஆனந்தக் கடலில் மூழ்கினார். வாழ்வின் பயனை அடைந்ததாக நினைந்து ஆனந்தப்படுகையில் அவ்வனுபவம் மறைந்து விடுகிறது! தாம் தனியனாக நிற்பதை உணர்கின்றார். எனவே அனுபவம் கிடைத்த உடனடியாக அந்த அனுப வத்தை நினைந்து நினைந்து பாடமுடிகிறது. அவரே பெற்ற அனுபவத்தை, அவ் வனுபவம் முடிந்து கைவிட்டுப் போன நிலையில், அதனை நினைவு கூர்ந்து பாடுகிறார். ஆகலின் அது நம்மை இன்றும் ஈர்க்கிறது. பிற நாட்டிலி ருந்து வந்தவரையும், சைவத்தையும் சிவபெருமானையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போப் போன்றவர்களையும் அவ் வனுபவப்பாடல் பிடித்து இழுத்துக் கொள்கிறது. அனுப் வத்தை நேரே பெற்றவர் அதிர்ஷ்டவசமாகத் தம் உணர்ச்சி கட்கு வடிவு கொடுக்கும் ஆற்றல் பெற்ற கவிஞராகவும் இருக்கிறார். திருக்கோவையார் போன்ற புலமை நயம் நிரம்பிய நூலை முன்னரே இயற்றி உள்ளத்து உணர்வுகட்கு வடிவு கொடுக்கும் கலையை நன்கு அறிந்த கவிஞராகவும் உள்ளார். இத்தகையவர் தாம் பெற்ற நேரடி அனுபவத்தை 255

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/259&oldid=852727" இலிருந்து மீள்விக்கப்பட்டது