பக்கம்:மணிவாசகர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 'அழுதடி யடைந்தவன்பர்' தொடராராய்ச்சி இத்தொடர், அழுது-அடி-அடைந்த-அன்பர் என்ற நான்கு சொற்களாலும், மூன்று சந்திகளாலும் ஆயது. பொருள் வெளிப்படையாக விளங்கும் எனினும், பரஞ்சோதி முனிவர் திருவாசகப் பயிற்சி மிகுதியால் இவ்வாறு கூறினா 'ரென முன்னரே காட்டப்பட்டது. ஆதலின், திருவாசகக் கருத்துடன் மாறுபடாமல் இத்தொடருக்கு உரை கான வேண்டும். அங்ங்னங் காணுங்கால் உண்டு பசி தீர்ந்த சாத்தன்' என்புழி, சாத்தனது பசி நீங்கியதாகிய காரியத் 'திற்கு அவன் உண்டது காரணமாயிருந்தமையின் உண்டு' என்னும் வினையெச்சங் காரணப்பொருளில் வந்ததாகக் கொண்டு உண்டமையாற் பசி நீங்கிய சாத்தன் எனப்பொருள் கொள்ளுமாறு போல, ஆண்டவனுடைய அடியை அடைந்ததாகிய காரியத்திற்கு அழுதது காரணம்ா கலின், அழுதமையால் ஆண்டவன் அருட்கழலையடைந்த அன்பர் எனப் பொருள்படும். படவே, (1) அழுதல் ஆண்ட 'வனுடைய அருட்கழலைப் பெறுதற்கு சாதனமா? என்பதும், (2) அடி யடைந்தாரா? என்பதும், (3) அன்பர் என்பது மாகிய இம்மூன்று பகுதிகளும் திருவாசக ஆதரவுகளைக் கொண்டு ஆராயத்தக்கன என்பது பெறப்படும். 1. அழுதல் ஒரு சாதனமா? இப்பகுதியை ஆராய்வதற்கு முன்னரே நாம் இங்கு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு அதாவது, உலகியலில் எவ்வெவ்வுயிர்கள் எவ்வெவ்வழிகளால் தாந் தாம் விரும்பியவற்றை அடைகின்றனவோ, அவ்வழிகளெல் லாம் இறைவன் திருவடிப் பேற்றுக்கும் உரியனவாகும் எனக் கருதுவது அவ்வடிப் பேற்றுக்கு அன்புநெறியிற் செல்லும் 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/49&oldid=852786" இலிருந்து மீள்விக்கப்பட்டது