பக்கம்:மணிவாசகர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னது துன்பமேயாகலின், மாணாப் பிறப்பென்றார் இதனாற் பிறப்புத் துன்பமென்பது உம், அதற்கு முதற் காரணம் அவிச்சை யென்பது உங் கூறப்பட்டன" என உரை வரைந்தனர். இதனை நோக்குங்கால், அறப்பயனா கிய இன்பத்தையே நுகரும் தேவப் பிறப்பினுந் துன்ப முண்டோ? என ஒர் ஐயந்தோன்றும். அத்தேவரின் துன் பத்தை அறியுங்கால் நமக்கு ஒர் வியப்புத் தோன்றாமலிராது என்னை? எந்த நாட்டிலும் மக்கள் நூற்றுவருக்கு ஒரு மருத்துவர் இருப்பது அரிதாகும். தேவவுலகத்திலோ முப் பத்துமூன்றுகோடி தேவர்களில் இரண்டுகோடி பேர் மருத்து வர் எனக் கேட்கின்றோமாகலின் என்க. நோயாளிகள் இல் லாதவிடத்து மருத்துவருக்கு வேலையில்லை என்பது நாம் நிந்ததொன்று. 'இடம், பொருள், ஏவ்ல் நிரம்பப்பெற்ற செல்வர்களாய் அம்மருத்துவர் இருப்பின் தந்தொழிலைக் கருதாமல் இடத்தின் நலம் நோக்கி ஆங்கு இருத்தலா காதோ’ எனின், அங்ங்னங் கருதவும் இடனில்லை" சrள்னை? - "குருடன் புகரா மார்த்தாண்டன் குட்டரோகியாம் எஞ்ளு புருடன்றலை நோய்புரந்த ஏற்குப்புயத்தில் வாதக் தக்கற்குச் சுர நோயுண்டு கயரோகம் சோமனுக்கு நீரிழிவு வருணற் கிவ்வாறமரர்க்கு நோயுண்டுண் டேமருத்து வரும்' "தீயவசுரர் பகையுண்டு செற்ற மார்வ மிகவுண்டு நோயுண் டனங்கனாருண்டு நோய்கட்கெல்லாங் தாயான காயமுண்டு கைதொழ வேண்டினருமுண்டு கற்பத்தே மாயுந்தன்மை யுண்டானால் வானோர்க்கென்னை வளனுண்டே' எனப் பெருந்திரட்டு என்னும் நூலிற் கூறப்பட்டிருத்தலி னால் என்க. இன்னும் பிறப்புத் துன்பமுடையது என்பதை, -. . . 8$

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/63&oldid=852802" இலிருந்து மீள்விக்கப்பட்டது