பக்கம்:மணிவாசகர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'எறியுங்கடலினுகத் துளையினியாமைக் கழுத்துப் புகுவதுபோற். புருடன் விவேகி யெனப்பிறந்து" எனவும் 'தென்பரவையினுட் கழிவடபரவை சேர்நுகத்துளை உள்செலல்போல், ஒன்பதிற் றொன்பதோடு மூவிலக்க முளவியோனியும் பிழைத்தேறிப் பின்பிறப்பிது பெற்று” - எனவும், 'உடம்பு பெற்றான்.இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கரிய இம்மானுட யாக் கையைப் பெற்றான் எனவும் வரும் இவற்றோரன்ன பலப் 建j俄}, மேற்காட்டியவற்றுள் மருந்தினனே பிறவிப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே" என்னும் அடிகள் திருவாக்கால் பிறவியைப் பிணியென்று உணர்வது அரிது என்பதும், அங் இனம் உணர்ந்தவர் அதனைப் பொறுக்கலாற்றாது வருந்து வர் என்பதும், அவ்வாறு அழுங்குவார்க்கே ஆண்டவன் அரியமருந்தாயிருந்தது அப்பிணியைப் போக்கி யருளுவ னென்பதும் பிறவும் உணரப்படும். இனி, உலகின்கண் துன்பத்தையும், நோயையுங் காணின், அவற்றை போக்கக்கருதி முயலாதார் யாருளர்? ஒருவரு மில்லை; ஆதலின், பிறப்பினைத் துன்பமெனவும் பிணி எனவும் உணர்ந்த அப்பெரியார் அதனைப் போக்குதற்கும் மீண்டும் அது வாராமல் இருப்பதற்கும் முயலாமல் அரை நொடிப் பொழுதேனும் மடிந்திருப்பரோ? அங்ங்ணமிருத்தல் மூடர் செயலன்றோ? எனவே அதனைப் போக்க விரைந்து முயல்வாராயினர். அங்ங்ணம் முயலுங்கால், தமக்குள்ள 'பிறவிப் பிணியைப் போக்குவான் அப்பிணி தன் மாட்டில் லாதவனாயிருக்க வேண்டும்; அவனால் தான் இது முடியும்' எனத் தெளிந்து அவன் சிவபெருமான் ஒருவனே' என உணர்ந்தனர். என்னை? 6.6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/66&oldid=852805" இலிருந்து மீள்விக்கப்பட்டது