பக்கம்:மணிவாசகர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக் கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்கினமும் மெய்ஞ்ஞான காட்டமுறு மெனினிங்கு நானுறுதல் வியப்பன்றே" 'வான்கலந்த மாணிக்க வாசகங்ண் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் - சுவைகலந்தென் ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாம லினிப்பதுவே" வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில் ஒருமொழியே யென்னையுமென் னுடையனையு மொன்றுவித்துத் தருமொழியா மெனிலிங்குச் சாதகமேன் சஞ்சலமேன் குருமொழியை விரும்பியயல் கூடுவதேன் கூறுதியே' என்பன. இவற்றுள் "வாட்டமிலா என்று தொடங்குஞ் செய்யுளிற் சிலர் ஓர் ஐயுறவு கொள்ளுவார்; அதாவது:. சில விலங்குகளிடத்தில் திருவாசகம் ஓதினால் அவைகட்கு ஞானம் வந்து விடுங்கொல்? என்பது. அங்ங்ணம் ஐயம் உண் டாதல் இயல்பே. இதற்கு அவ்வாசிரியர் என்ன கூறுகின்றன ரென்பதைக் கூர்ந்து நோக்கவேண்டும். ஏதேனுங் கூறியே. யிருப்பார். என்னை? எஞ்ஞான்றும் நமது புலவர் பெரு மக்கள் பிறருக்குத் தோன்றும் ஐயம் தமக்குந் தோன்றப் பெற்று அதற்கு அவரியற்றுஞ் செய்யுளுள்ளே விடையிறுத் துச் செல்வாரேயன்றி, தாம் அகப்பட மாட்டாராதலின் Gsö。 - - - நமது இராமலிங்க அடிகள் மேற்காட்டிய செய்யுளில் கேட்டபொழுது எனக் கூறியிருத்தலே அவ்வையுறவை ஒழிக்கும் என்க: எனவே அவ்விலங்குகள் ஞானம் பெற்ற தனால் திருவாசகத்தைக் கேட்டதென்றும் இல்லையானால் 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/94&oldid=852838" இலிருந்து மீள்விக்கப்பட்டது