பக்கம்:மணி பல்லவம் 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

127

தொடர்ந்து வருகிறேன் என்பதை திரும்பிப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு நகைவேழம்பருடைய ஒற்றைக் கண்ணால் முடிந்ததோ இல்லையோ, நான் அவரை நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொண்டுவிட்டேன். அந்த ஒற்றைக்கண் முகத்தின் இலச்சணத்தைத்தான் ஆயிரம் பேர்கள் கூடிய கூட்டத்துக்கு நடுவில் பார்த்தாலும் நன்றாக நினைவு வைத்துக் கொள்ள முடியுமே!”

“அதிருக்கட்டும் நீ திரும்பி வருவதற்கு ஏன் இவ்வளவு நேரமாயிற்று? அவர் வசிக்குமிடம் இங்கிருந்து நெடுந்தொலைவில் இருக்கிறதோ?”

“அதைத்தான் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. நான் பின் தொடர்ந்து சென்று பார்த்த மட்டில் சொல்லுகிறேன். மருவூர்ப் பாக்கத்திலுள்ள படைக்கலச் சாலைக்குள் அவரும், அவருடைய நண்பர்களும் நுழைந்தார்கள். அந்திப் போதுவரை காத்திருந்தும் அவர்கள் அங்கிருந்து வெளியே வரவில்லை. அதற்குமேலும் காத்திருப்பதில் பயனில்லை என்று திரும்பிவிட்டேன். ஒருவேளை அந்தப் படைக்கலச் சாலையில்தான் அவர் வசிக்கிறாரோ என்னவோ?”

“இருக்கலாம், ஆனால் யாரோ நண்பர்களோடு படைக்கலச்சாலைக்குள் நுழைந்தாரென்று சொல்லுகிறாயே! அவர் இந்த மாளிகையிலிருந்து வெளியேறிச் செல்லும்போது தனியாக அல்லவா சென்றார்?”

“நடுவழியில் அவருடைய நண்பர்கள் போலத் தோன்றிய சிலர் அவரோடு வந்து சேர்ந்து கொண்டார்கள் அம்மா. அந்த நண்பர்களில் சிலரை நேற்றுக் கடற்கரையில் நடந்த மற்போரின்போது அவருடன் சேர்த்துப் பார்த்த தாக எனக்கு நினைவிருக்கிறது.”

“நகைவேழம்பரும் அவரைப் பின்தொடர்ந்து சென்றதாகக் கூறினாயே வசந்தமாலை! அவரும் நண்பர்களும் படைக்கலச் சாலைக்குள் நுழைந்தபோது நகைவேழம்பர் என்ன செய்தார்? அவர்களைப் பின்தொடர்ந்து அவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/128&oldid=1141801" இலிருந்து மீள்விக்கப்பட்டது