பக்கம்:மதன கல்யாணி-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மதன கல்யாணி

அதைக் கேட்டு மிகவும் வியப்படைந்த மைனர், “நீர் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே! யாராய் இருந்தாலும், அவள் உள்ளே சேர்ப்பதில்லை என்று சொல்லிக் கொள்ளுகிறார்களே. அப்படி இருக்க, நான் பகலில் எப்படி வரமுடியும்?” என்றான்.

அதைக் கேட்ட அந்தக் கிழவி, “அது உண்மைதான்; ஆனால் மனிதருக்கு மனிதர் வித்தியாசம் இல்லையா? நீர் பெருத்த ஜெமீந்தார் சிறுபிள்ளை, ஏதோ முயற்சி செய்து பார்க்கலாம் என்ற நம்பிக்கையின் மேல் சொன்னேன். ஆனால், அவள் இப்போது தனியாக வருவாளானால், அது நல்லது. அவளோடு இன்னொரு மனிதர் வருவார் அவர் வராமல் இருந்தால், இப்போது உம்மை நேரில் கொண்டு போய் அவளிடத்தில் விட்டுப் பழக்கம் செய்து வைக்கலாம்” என்றாள்.

அதைக் கேட்ட மைனர் கரைகடந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் ஆவலும் கொண்டவனாய் அன்றிரவில் சம்பவித்த துன்பங்களை எல்லாம் முற்றிலும் மறந்தவனாய், “அப்படிச் செய்ய சாத்தியப் படுமோ?” என்றான்.

கிழவி:- இருக்கட்டும்; ஏதோ முயன்று பார்க்கிறேன். நீர் கொஞ்ச துரத்திற்கு அப்பால் போய் மறைந்து கொண்டிருந்து, வண்டி உள்ளே நுழைந்து விட்டவுடன் இந்தக் கதவண்டை வந்து நில்லும். அதற்குள் நான் சங்கதியை அவளிடம் தந்திரமாகச் சொல்லிப் பார்த்து அதன் முடிவை இங்கே வந்து உம்மிடம் தெரிவிக்கிறேன் - என்றாள்.

அதைக் கேட்ட மைனர் தனது செவிகளை நம்பாமல், இன்பக் கனவு கண்டு, ஆனந்த வெள்ளத்தில் மிதந்தவனாய், “நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயோ என்னவோ? இதை மாத்திரம் நீ முடித்து வைப்பாயானால், நாளை சாயுங்காலம் உனக்கு ஐந்நூறு ரூபாய் வந்து சேர்ந்துவிடும். இதை நீ சத்தியமாக நம்பலாம்?” என்றான்.

உடனே கிழவி, “அதெல்லாம் உம்முடைய அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. அவளோடுகூட இப்போது வேறொரு மனிதர் வராமல் இருந்தால், உமக்கு நட்புச் செய்து வைக்கிறேன். அவர் வந்தால் காரியம் பலியாது. நீர் போக வேண்டியது தான் முடிவு” எனறாள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/104&oldid=646979" இலிருந்து மீள்விக்கப்பட்டது