பக்கம்:மதன கல்யாணி-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மதன கல்யாணி

தேகம் சிவந்ததாகவும் பளபளப்பும் செழுமையும் பொருந்திய தாகவும், இயற்கையான கம்பீரமும், வசீகரமும் பெற்றதாகவும் இருந்தமையால், அவனுக்கு வயது பத்தொன்பதிற்குள்ளாகவே இருந்து ஆனாலும் அவன் இருபது அல்லது இருபத்தொரு வயதடைந்த பக்குவ காலத்து யெவனப் புருஷனாகவும், ஆண் பெண் பாலார் ஆகிய இருவகுப்பாரும் அவனைக் கண்டு மோகங் கொள்ளத் தக்க மனோகர வடிவத்தினனாகவும் காணப்பட்டான். விரிந்து உயர்ந்த நெற்றியும், கருத்தடர்ந்த புருவவிற்களும் செழித்து வளர்ந்து முழங்கால் வரையில் வந்து வீழ்ந்த கேசமும், பராக்கிரமம், அடக்கம், பணிவு முதலிய சகலமான சிறப்புகளும் அவனது முகத்திலேயே ஜ்வலித்ததன்றி, இயற்கையான மகுடமோ என்னும்படி, அபாரமான ஞானமும், அதிசூக்ஷமை புத்தியும் அவனது சிரத்தை அழகு செய்து கொண்டிருந்தன. வீணை வாசிப்பதிலோ அவனை வாணியின் அவதாரம் என்று கொள்ள வேண்டும், அவனது வீணா கானத்தைக் கேட்ட வண்ணம் அவனது தேக அமைப்பைக் கவனிப்போர் ஒவ்வொருவரும், கந்தருவ லோகத்து மனிதனே தவறிப்போய் பூலோகத்தில் ஜனித்துவிட்டான் என்று சொல்லிக் கொண்டே போவதுண்டு மன்மதாகாரமான அவனது வடிவமும், மாதுரியமான அவனது குண ஒழுக்கங்களும், ஆனந்த மயமான அவனது சங்கீதமும் ஒவ்வொருவரது மனதிலும் பசுமரத்தாணி போலப் பதிந்து யாவரையும் இன்பக்கடலில் ஆழ்த்தின.

இத்தகைய சுந்தர ரூபனான மதனகோபாலன் சுத்தமான உடை அணிந்து வெளிப்படுவானாயின், அவனைக் காண்போர் யாவரும், அவன், ஏதோ ஒரு சமஸ்தானத்தைச் சேர்ந்த ராஜ வம்சத்து இளைஞன் என்ற நினைவும் மதிப்பும் இயற்கையிலேயே உண்டாவதன்றி, அவன் இன்னான் என்பதை அறியாதவரும், அறிந்தோரும், அவனிடம் மிகுந்த மரியாதையோடும் அன்போடும் நடந்து கொண்டனர்.

இத்தகைய புருஷ உத்தமனான மதனகோபாலன், அநாகரிக மாக ஒசை செய்து கொண்டு செல்லாமல், மிகவும் அடக்க வொடுக்கமான தோற்றத்தோடு மெத்தையின் மீது ஏறினான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/114&oldid=646998" இலிருந்து மீள்விக்கப்பட்டது