பக்கம்:மதன கல்யாணி-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 மதன கல்யாணி

வஸ்திரத்தால் கண்களைத் துடைத்துக் கொண்டான். அதைக்கண்ட கண்மணி தணலில் வீழ்ந்த புழுவைப் போலத் துடித்தவளாய்க் கீழே குனிந்த வண்ணம், “உங்களுக்கு உடம்பு சரியாக இல்லா விட்டால், பாடுவதை நாளைக்கு வைத்துக் கொள்வோமா, இன்றைய தினம் பாட்டில்லாவிட்டால் பரவாயில்லை” என்று அன்போடு கூறினாள். அதைக் கேட்ட மதனகோபாலன், பொங்கி எழுந்த தனது மனவெழுச்சியை அடக்கிக் கொண்டு, “ஒருநாளும் கண்ணும் கண்ணிருமாகக் காணப்படாத மனிதர் அழுவதைக் காணவே; என்னை அறியாமல், என் தேகம் தவித்துப்போய் விட்டது; மனமும் குழம்பிவிட்டது. என்னைக் கண்டு நீ எப்படி உன்னுடைய அழுகையை அடக்கிக் கொண்டாயோ, அது போல உன்னைக் கண்டவுடனே நானும் அழுகையை அடக்கிக் கொண்டேன். வேறு எவ்விதமான தேக அசெளக்கியமும் இல்லை. எங்களைப் போல கீழ்நிலைமையில் இருப்பவர்களுக்குத் தான் துன்பங்களும் விசனங்களும் உண்டாவது சகஜம். உன்னைப் போல இருக்கும் பெரிய இடத்துக் குழந்தைகளுக்கு என்ன குறை இருக்கப் போகிறது என்பதும், நீங்கள் எல்லாம் ஏன் விசனப்பட வேண்டும் என்பதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றன. அத்தையம்மாள் உன்னை அவர்களுடைய இருதய கமலத்தில் வைத்து அவர்களுடைய உயிரைவிட அருமையாகப் பாதுகாத்து வருகிறார்கள். சகலமான செளகரியங்களும், ஆடை ஆபரணங்களும் குறைவில்லாமல் நிறைந்திருக்கின்றன. நீ தக்க பெரிய இடத்தில் வாழ்க்கைப்பட்டு, பெருத்த சமஸ்தானத்துக்கு எஜமாட்டி ஆகப் போகிறாய்; எவருக்கும் கிட்டாத பெருத்த வைபவங்களும் உன்னத பதவியும், உன்னுடைய வழி பார்த்து நிற்கையில், நீ இப்படி விசனித்தழுவதை காண, எனக்கு இது கனவோ அல்லது நனவோ என்ற சந்தேகம் உண்டாகிறது” என்று மிகவும் உருக்கமாகவும் மனப்பூர்வமான வாத்சல்யத்தோடும் கூறவே, அதைக் கேட்ட கண்மணியம்மாள் நாணத்தினால் கீழே குனிந்து கொண்டாள். அவளது மனதில் மறைந்திருந்த பெருந் துயரமும், பலவகையான உணர்ச்சிகளும் பொங்கி எழுந்து அவளை மேற்கொண்டன; அவளது கண்களில் திரும்பவும் கண்ணிர் பெருகி வழிந்தது. மிகவும் மூர்க்கமாகக் கிளம்பிய தனது துயரத்தை அடக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/118&oldid=647006" இலிருந்து மீள்விக்கப்பட்டது