பக்கம்:மதன கல்யாணி-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 103

வேண்டும்; தாய் தகப்பன் இல்லாத அநாதைகள் எல்லாம் உயிரை வைத்திருப்பதே கூடாது. நாங்கள் கண் கலங்கி அழுதால், தாய் அதை ஒரு நொடியும் சகித்திருக்க மாட்டாள். குழந்தைகளின் தரங்கமான ஆசைகளைப் பக்தி செய்வதிலும், குழந்தைகளைத் க்க இடத்தில் கொடுத்து rேமமாக வைப்பதிலும், தாய் கப்பன்மாருக்கு இருக்கும் உண்மையாது. அக்கறையும் உருக்கமும் பகுத்தறிவும் மற்றவருக்கு இருக்குமா! அவர்கள் மாத்திரம் உயிரோடிருந்தால், இந்த மாரமங்கலத் தாருடைய முகத்தில் விழிக்க மாட்டார்கள்; அடக்குவோரான ஆண் பிள்ளை இல்லாமல் இருபது வருஷமாக அந்தக் குடும்பம் : குலைந்து டக்கிறது. தாய்க்கும் பிள்ளைக்குமே ஒத்துக்கொள்ளுகிறதில்லை. ஒருவர் போன வழி மற்றொருவர் போகிறதில்லை. தாய் ஒரு விதத்தில் கெட்டவளாக இருந்தால், பென் நூறு விதத்தில் கெட்டவளாக இருக்கிறாள். பிள்ளையோ ஆவி, விதத்தில் கெடுதலாய் இருக்கிறார். ஒவ்வொருவரும் தாமே அரசு, தமது சித்தமே மந்திரி என்றெண்ணி, தாம் தாம் நினைத்த காரியங்களை எவ்வித அச்சமுமின்றிச் செய்கின்றனர். எப்போது பார்த்தாலும் ஒருவருக்கொருவர் சண்டையும் சச்சரவும் மனஸ்தாபமும் வேற்றுமையுமாகவே இருக்கின்றன. அந்த மனிதருக்கிடையில், நான் போய் இல்லற வாழ்க்கை செய்து வைபவங்களை அனுபவிக்கப் போகிறேனோ, அல்லது புலி கரடிகள் நிறைந்த கூண்டிற்குள்ளிருந்து சதாகாலமும் நரக வேதனை அனுபவிக்கப் போகிறேனோ அல்லது, அதற்குள் ஏதாவது ஒரு கிணற்றில் விழுந்து உயிரை விட்டு உண்மையான ஆனந்தம் அனுபவிக்கப் போகிறேனோ! என் தலைவிதி எப்படி முடியப் போகிறதோ! அநகேமாக கடைசியில் சொன்ன முடிவு தான் எனக்குச் சமீபத்தில் ஏற்பட்டு விடும் என்றும் என் மனசுக்குள் ஓர் எண்ணம் உண்டாகிக் கொண்டே இருக்கிறது” என்று மிகவும் மனமாழ்கிக் கூற, அவளது பரிதாபகரமான சொற்களைக் கேட்ட மதனகோ பாலனது மனம் அனலிடு மெழுகாய் உருகி *-கார்ந்தது. அவன் மாரமங்கலம் ஜெமீந்தாது மாளிகையில் துரைஸா அம்மாளுக்கும் கோமள வல்லி அம்மாளுக்கும் ஒவ்வொரு நாளும் வினை கற்றுக் கொடுத்து விட்டு பெரு'ானாலும், அந்தக் குடும்பத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/121&oldid=647013" இலிருந்து மீள்விக்கப்பட்டது