பக்கம்:மதன கல்யாணி-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1 13

இந்த துர்புத்தியை விட்டுவிடு; வீணாய்க் கெட்டுப் போகாதே; தம்முடைய குலமென்ன! அந்தஸ்தென்ன அவன் நம்முடைய ஜாதியானாக இருப்பதினாலேயே நம்முடைய சம்பந்தத்துக்கு அவன் அருகனாவானா? அவன் கேவலம் வாத்தியம் வாசித்து வயிறு வளர்ப்பவன், அவன் மேல் நீ ஆசைப்படுகிறாய் என்பதைக் கேட்டால், ஊரார் சிரிக்க மாட்டார்களா? நீ படித்த தெல்லாம் இதற்குத்தான் உபயோகப்பட்டதா? அவனிடம் அழகிருக்கலாம் நல்ல குணம், நல்ல நடத்தை எல்லாம் இருக்கலாம். ஆனால் அவன் நமக்குச் சமமான அந்தஸ்துடையவனாக இருக்க வேண்டாமா? கலியாணம் நடக்கும் போது, அநாதையான இவன் மாத்திரம் வந்திருந்தால் அதைக் கண்டு ஜனங்கள் எவ்வளவு தூரம் ஏளனம் செய்வார்கள் என்பதை நீ கொஞ்சமாவது நினைத்தாயா? அப்படிப்பட்ட கலியாணத்தை இந்தக் கண்ணால் பார்க்க நேர்ந்தால், நான் உயிரை வைத்துக் கொண்டே இருக்க மாட்டேன். இத்தனை வயதாகியும், உன்னுடைய குழந்தைப் புத்தி போக வில்லையே! மற்ற எல்லா விஷயத்திலும், நீ பழுத்த ஞானம் பேசுகிறாய். இதில் மாத்திரம், அசட்டுத்தனமாக நடந்து கொள்ளு கிறாயே! இன்றோடே இந்த எண்ணத்தை விட்டுவிடு. தகாத காரியத்தில் வீணாகப் பிடிவாதம் பிடித்து என்னை அகால மரணத்துக்கு ஆளாக்காதே” என்று நயமாகவும் அதிகாரமாகவும் அன்போடும் மொழிந்துவிட்டு துரைராஜாவையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றாள்.

இங்ஙனம் நிலைமை இப்படி இருக்க, சிறிது நேரத்திற்கு முன்னர் பங்களாவை விட்டு வெளிப்பட்ட மதனகோபாலன் தன்னையும் உலகத்தையும் அடியோடு மறந்து பைத்தியக்காரன் போல நடந்து, தான் இன்னவிடத்திற்குப் போக வேண்டும் என்பதையும் நினையாமல், எதிர்ப்படும் விதிகளில் எல்லாம் போய் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். அன்று தனக்கு ஏற்பட்ட அவ மரியாதையைப் பற்றி அவன் சிறிதும் விசனப்பட்டவனாகக் காணப்படவில்லை. ஆனால் தான் மற்ற யாவரிலும் சிறந்தவனாக மதித்துத் தனது வாத்சல்யம் முழுவதையும் வைத்த அருங்குண மணியான அந்தப் பெண்ணரசியின் துன்பங்களையும் துயரங் களையும் அவளது பரிதாபகரமான நிலைமையும் உணர்ந்தபின் ம.க.1-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/131&oldid=647032" இலிருந்து மீள்விக்கப்பட்டது