பக்கம்:மதன கல்யாணி-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 127

இருக்கிறது நியாயம் வேறே என்ன காரணத்தினால் நீ இங்கே வந்தாய் என்பதை நானா சொல்லுகிறது? நீ அல்லவா சொல்ல வேண்டும். எவ்வளவோ காலமாக இந்த மாளிகைக்குள் வந்து வீணை கற்றுக் கொடுத்து விட்டு ஒவ்வொரு நாளும் வழியை அறிந்து கொண்டு போன உனக்கு இன்று வழி தவறிப்போன தென்பதை உண்மை என்று யார்தான் உடனே நம்பி விடுவார்கள்? இதுவரையில் நீ மிகவும் யோக்கியமாக நடந்து வந்ததில் இருந்து, உன்னுடைய சொல்லை நான் உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், என் மனசுக்குள்ளாக ஒரு வகையான அவநம்பிக்கை இருந்து கொண்டுதான் இருக்கும். இருந்தாலும் பாதகமில்லை; போனது போட்டும். ஏதோ தவறுதலாக வந்து விட்டாய், அது வழியின் தவறுதலோ, அல்லது, உன்னுடைய காலின் தவறுதலோ எப்படியாவது இருக்கட்டும். இப்படி வந்தது வேறே எவராய் இருந்தாலும் இந்நேரம் அவர்கள் அடையும் தண்டனை வேறு. உன் விஷயத்தில் எனக்குக் கோபமே உண்டாகவில்லை. ஏனென்றால் நீ மிகவும் அருமையான குணமும், மேலான பிறப்பும் வாய்ந்தவன் ஆகையால், இந்த, இடங்களுக்கு நீ வருவதை ஒர் அதிர்ஷ்டமாக எண்ண வேண்டும். உன்னை நிற்க வைத்து இவ்வளவு தூரம் கண்டிப்பாகப் பேசியதைப் பற்றி என்னுடைய மனம் நிரம்பவும் தவிக்கிறது; நீ நிற்பது எனக்குக் கொஞ்சமும் சகிக்கவில்லை. இந்த சோபாவில் உட்கார்ந்துகொள். இன்று நீ வந்தபோதே, ஏதோ உடம்பு அசெளக்கியம் என்று சொன்னாய். அதனாலேயே இந்தத் தவறும் நடந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்; நிற்க வேண்டாம்; உட்கார்ந்து கொள்ளப்பா” என்று மிகவும் அன்பாகவும் குளிர்ந்த மொழியாகவும் கூறினாள்.

அவள் அவனை முதலில் தனது அந்தப்புரத்திற்குள் கண்ட வுடனே, அவளுக்குண்டான வியப்பும் திகைப்பும் அவன் கூறிய அதிருப்திகரமான காரணத்தைக் கேட்க மிகவும் அதிகரித்தன ஆதலால், அவள் தொடக்கத்தில், அவனிடம் சிறிது கடுமையாக மொழிந்தாள் ஆனாலும், அவன் மீது அவள் கொண்ட கரைகடந்த அன்பும் வாஞ்சையும் பொங்கி எழுந்து ஒரு நிமிஷ நேரத்தில் அவளது மனதை நெகிழ்த்திவிட்டது. நிற்க, அவனது அற்புதமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/145&oldid=647056" இலிருந்து மீள்விக்கப்பட்டது