பக்கம்:மதன கல்யாணி-1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மதனகல்யாணி

சயன அறையை அடைந்து அங்கே கட்டில் மெத்தை முதலிய சாமான்கள் தாறுமாறாக உருண்டு புரண்டு ஒன்றன்மேல் ஒன்று ஏறிக் கொண்டு கிடந்ததையும், பாலாம்பாள் ஜன்னலில் கட்டப் பட்டிருந்ததையும் கண்டு, திருடர்கள் தப்பியோடி விட்டதாக நினைத்தனர். ஒருவர் ஒடோடியும் சென்று பாலாம்பாளை அவிழ்த்துவிட்டு அவளது வாயின் துணியை விலக்கிவிட, முக்கால் உயிரும் போன நிலைமையில் இருந்த பாலாம்பாள், “அப்பாடா” என்று கதறிக்கொண்டு ஓடி வந்து கிழவரைக் கட்டிக் கொள்ள, அவர் அவளைத் தைரியப்படுத்தி, நடந்த விவரங்களைக் கேட்க, அவள் மைனர் வந்ததையும் அவனுக்கும் தனக்கும் நடந்த வர்த்தமானங்களையும் மறைத்து, தான் நாடகக் கொட்டகையில் இருந்து வந்தவுடனே, உடையை மாற்றிக்கொண்டு தனியாக படுத்துத் துங்கிய போது, வேலைக்காரர்கள் கூக்குரலிட்டதைக் கேட்டு விழித்துக் கொண்டு திருடர் கதவைத் திறக்காமல் இருக்கும் படி தானே தனியாக கட்டில் முதலிய சாமான்களை குறுக்கிலே வைத்தத்ாகவும், திருடர்கள் தள்ளிக்கொண்டு வந்து சொத்துக் களை எல்லாம் எடுத்துக் கொண்டு தன்னைக் கட்டிப் போட்டு விட்டு அப்போதே போனதாகவும் கூறி ஏராளமான சொத்துக்கள் போய்விட்டது. ஆகையால் உடனே துரத்திக் கொண்டு போகும்படி வேண்டிக் கொண்டாள்; அந்த வரலாற்றைக் கேட்ட வுடனே சப் இன்ஸ்பெக்டெர் தம்மோடு இரண்டு ஜெவான்களை வைத்துக் கொண்டு மற்றவரை நாற்புறங்களிலும் இருவர் இருவராக துரத்திக் கொண்டு போகும்படி உத்தரவு செய்ய, அவர்கள் அவ்வாறே சென்றனர்.

அவ்விடத்தில் நின்ற நாடகத் தலைவரும், சப் இன்ஸ்பெக்டரும், போலீஸ் ஜெவான்களும் அங்கே வீழ்ந்து கிடந்த கட்டில் முதலிய சாமான்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒழுங்காக நிமிர்த்தி வைக்கத் தொடங்கி யாவற்றையும் எடுத்தபோது, கட்டிலின் மேல் இருந்த மெத்தை தலைகீழாகக் கவிழ்ந்து சுருண்டு கிடந்ததைப் பிரிக்க, அதற்குள் ஒளிந்து கொண்டிருந்த ஒர் ஆள் காணப்பட்டான். அவனைக் கண்ட நாடகத் தலைவர் திடுக்கிட்டு, “இதோ ஒரு திருடன் ஒளிந்து கொண்டிருக்கிறான்; பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கூற, போலிஸ் ஜெவான் ஒருவன், “அடே! எங்கே ஒளிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/184&oldid=649626" இலிருந்து மீள்விக்கப்பட்டது