பக்கம்:மதன கல்யாணி-1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 - மதன கல்யாணி

எண்ணம் எல்லாம் எண்ணியெண்ணித் தவித்தது. மறுநாள் தன்னையும் மாரமங்கலம் மைனரையும் ஒன்றாக மனை மீது உட்கார வைத்து நிச்சயதார்த்தம் செய்வார்களே என்றும், தான் அதிலிருந்து எவ்வாறு தப்புவது என்றும் அவள் பலவாறு எண்ண மிடலானாள். தான் மீனாகூஜியம்மாளிடம் எவ்வளவு நயமாக வேண்டினாலும் அவள் அந்தச் சம்பந்தத்தை விடவே மாட்டாள் ஆதலால், அந்த மனத்தில் தனக்கு விருப்பமில்லை என்பதை கல்யாணியம்மாளிடத்திலேயே அப்போது சொல்லிவிடலாமா என்ற ஒர் எண்ணம் அவளது மனதில் உதித்தது. ஆனால், அவள் மிகவும் மிருதுத் தன்மையும் நாணமும் வாய்ந்தவள் ஆதலால், அவ்வாறு துணிந்து கூற அஞ்சினதன்றி, தான் அவ்வாறு கூறினால், மீனாகூஜியம் ாைளுக்குத் தன்மீது கோபம் பிறக்கும் என்ற நினைவும், தான் அவளது மனத்தை வருத்தலாகா தென்ற நினைவும் உண்டாயின. தனது குழந்தைப் பருவத்தில் இருந்து, தன்னைச் சீராட்டிப் பாராட்டு வளர்த்து எண்ணிறந்த பாடுகள் பட்டு தன்னை மனுஷயாக்கி, இன்னமும் தனது நன்மை ஒன்றையே கருதும் அத்தையின் மனம் வருந்தும்படி தான் நடப்பது பற்றி, அவள் தனக்குத்தானே பெரிதும் துன்புற்று விசனித்தாள். இருந்தாலும் மிகுதியுள்ள தனது ஆயுட்காலம் முழுதையும் அந்தக் கலியாணம் பாதித்து, தன்னைத் துயரக்கடலில் ஆழ்த்தக்கூடிய தென்பது நிச்சயமாக விளங்கியது ஆகையால், தனது அத்தை செல்வம் ஒன்றையே கருதியதன்றி தனது சந்தோஷ வாழ்க்கையைச் சிறிதும் கருதவில்லையே என்ற கவலையும் ஏக்கமும் கொண்ட வளாய், கண்மணி, தனது பேருபகாரியான அத்தையின் மனம் கோணும்படி நடந்து கொள்வதைவிட தனது உயிரை மாய்த்துக் கொள்வதே தக்க காரியம் என்ற ஓர் முடிவையே தனது மனதில் ஏற்படுத்திக் கொண்டாள். அடுத்த நாள் இரவில் நிச்சயதார்த்தம் செய்வதற்கு தன்னை அவர்கள் அழைக்கும் முன் தான் கிணற்றில் விழுந்தோ, அல்லது, விஷத்தைத் தின்றோ இறந்து போக வேண்டும் என்ற ஒர் உறுதி செய்து கொண்டவளாய், கண்மணி யம்மாள் உட்கார்ந்திருந்தாள்.

கல்யாணியம்மாள் கடைசியாகச் சொன்ன வார்த்தையைக் கேட்ட மீனாகூஜியம்மாள் கரைகடந்த மகிழ்ச்சியும் குதுகலமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/222&oldid=649674" இலிருந்து மீள்விக்கப்பட்டது