பக்கம்:மதன கல்யாணி-1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 - மதன கல்யாணி

இருந்தமையால், கல்யாணியம்மாள், தான் அம்பட்டக் காருப்பாயி யோடு சம்பாஷிப்பதை தனது புதல் வியராகிலும் பிறர் எவராகிலும் கவனித்து விடுவார்களோ என்ற அச்சத்தினாலும் முன்னெச் சரிக்கையாலும், அந்த ஜன்னலில் இருந்த மூலையில் போடப் பட்டிருந்த ஒரு சோபாவிற்கு வந்து அதன் மேல் உட்கார்ந் திருந்தாள். அவள் அந்த ஜன்னலின் பக்கம் தனது முதுகைத் திருப்பி உட்கார்ந்து இருந்தமையால் பின் புறத்தில் தட்டியின் மறைவில் தனது புத்திரிகள் இரந்து தன்னை உற்றுக் கவனிக் கிறார்கள் என்பதைப் பற்றி அவள் சந்தேகிக்கவும் கூடாமல் இருந்தது.

அவ்வாறு புதல்வியர் நின்ற இரண்டு நிமிஷத்திற்குப் பிறகு, பொன்னம்மாள் முன்னும், அம்பட்டக் கருப்பாயி பின்னுமாக கல்யாணியம்மாள் இருந்த சோபாவிற்கு வந்து அவளுக்கெதிரில் நின்றார்கள். கருப்பாயியைக் கண்ட கல்யாணியம்மாள் தான் மிகுந்த கோபம் கொண்டிருப்பவள் போல நடித்து, அவளை ஏற இறங்கப் பார்த்து, அவள் யார் என்பதை அறிந்து கொள்ள மாட்டாதவன் போல சந்தேகமான பார்வையாகப் பார்த்து, “யார் நீ? ஒகோ! நீயா! உன்னைப் பார்த்து அநேக வருஷங்கள் ஆகின்றன ஆகையால், சீக்கிரத்தில் அடையாளம் தெரயிவில்லை. அதிருக்கட்டும்; நீ வந்தால் என்ன ஒரு பெருத்த கவர்னர் பெண்டாட்டி வருவதைப் போல ஆடம்பரம் செய்கிறாயே! என்னிடம் பேச வேண்டுமானால், சரியான சமயம் பார்த்து, என்னுடைய செளகரியத்தை அறிந்து, அதற்கு ஒத்தபடி வருகிறதா அல்லது, வாசலில் வந்து நின்று கொண்டு, உடனே உள்ளே வரச் சொல்லாவிட்டால், நீயே வந்து விடுவதாக மிரட்டு கிறாயாமே! நீ திருடுவதற்காக வந்தாய் என்று சொல்லி உன்னை உடனே போலீசாரிடம் நாங்கள் ஒப்புவித்து விட்டால் நீ என்ன செய்வாய்? இனிமேல் இம்மாதிரி, மற்றவர் சந்தேகிக்கும்படியாக ஆடம்பரம் செய்யாதே; தெரிகிறதா? அப்படிச் செய்தால், நான் உனக்கு மேல் போக்கிரியாக நடந்து கொள்வேன்” என்று நயமாகவும் அதிகாரமாகவும் கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/236&oldid=649700" இலிருந்து மீள்விக்கப்பட்டது