பக்கம்:மதன கல்யாணி-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 219

அதைக் கேட்ட கருப்பாயி மிகவும் புரளியாக, “அடியாத்தே ஒனக்குவார கோவத்தப்பாறேன்! என்ன போலீசுலே வச்சுடு வியோ! எங்கே? கொஞ்சூண்டு வச்சுத்தான் பாரேன்; அப்புறம் ஒன்னே நான் இந்த வங்களாவுலே வச்சுடுவேன்னு பாத்துக் கினியா? அந்த உறும்பலெல்லாம் இஞ்சே உறும்பாதேங்கறேன். ஒன்னோ:ெ , உசிருநெலை எல்லாம் எங்கிட்ட இருக்குதுங்கறத்தே மறந்து விட்டியோ? ஒங்கவூட்டு வாசல்லே வந்து காத்துக்கிட்டுக் கெடக்க, நான் என்ன ஒங்க ஆட்டு எச்சிக்கலே திங்கற நாயின்னு ரோசனை பண்ணிக்கிட்டியா சவாசு சவாசு! நல்லாச்சொன்னேன்! நான் என்னமோ மின்னெப்பின்னே ரோசனை பண்ணி, நம்ப மனிசியாச்சே, அவளுக்குக் கெடுதவந்துடுமேன்னு இம்புட்டுத் தூரம் ஒடியாந்தா, சுத்தமா நன்னி கெட்டவளாய்ப் பேசிறியே?” என்று நொண நொனவென்று சரமாரியான சொல் அம்புகளை எடுத்துப் பிரயோகம் செய்யத் தொடங்கினாள். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் தனது கோபத்தை எல்லாம் உடனே விலக்கி, பெட்டிப் பாம்பாக அடங்கிப் புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டு “ஏது கருப்பாயிக்கு இன்று இவ்வளவு கோபம் வருகிறது? ஊரிலிருந்து நடந்து வந்த அலுப்பு போலிருக்கிறது. ஒரு வண்டியிலாவது வரக்கூடாதா? அதற்காகும் செலவை நான் கொடுத்திருப்பேனே, அதிருக்கட்டும்; நீ நிற்காதே; உட்கார்ந்து கொள்; அப்புறம் பேசுவோம்” என்று மிகவும் அன்பாக கூறி அவளை உபசரித்தாள். அப்போது பொன்னம்மாள் சிறிதும் சலனமின்றி பேசாமல் பக்கத்தில் நின்று கொண்டே இருந்தாள். ஆனால் ஜன்னலிற்கு வெளியில் நின்ற இளங்குமரிகள் இருவரும் அந்த விபரீதமான சம்பாஷணையைக் கேட்க, தமது கண்களையும் செவிகளையும் நம்பாமல் அது கனவோ, அல்லது நனவோ என்ற ஐயமும் திகைப்பும் குழப்பமும் அடைந்து, கல்லாகச் சமைந்து நின்றனர். அப்போது கருப்பாயி நின்றபடியே, “ஒ இப்பத்தான் புத்தி தெளிஞ்சிச்சோ காரியம் ஆவனுமின்னா களுதையோடே காலெயும் புடீன்னு சொல்லுவாங்க; அதப் போலெ நீயும் செய்யிறியே. ஒன்னோடெ வேல ஆவற வரையிலே கெஞ்சா தெல்லாம் கெஞ்சினே; எங்காலெக்கூடப் புடிச்சுக்கினே; இப்ப இன்னடான்னா என்னெப் பிச்செக்காரியெப் போலே நெனெச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/237&oldid=649702" இலிருந்து மீள்விக்கப்பட்டது